சமூக வலைதளங்கள் மூலம் நடக்கும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் உங்கள் தகவல்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது எப்படி என்று பார்க்கலாம்.
சமூக வலைதளங்கள் மூலம் நடக்கும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். முடிந்தவரை உங்கள் தகவல்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது எப்படி என்று பார்க்கலாம்.
பிரச்னைகள் முதலில் வருவது தெரியாத நபர்கள் மூலமாகத்தான். அதனால் தெரியாத நபர்கள் உங்களை அணுகினால் அவர்களுக்கு பதிலளிக்காதீர்கள். அதேபோல் உங்கள் அக்கவுண்ட் தகவல்களையும் எல்லோர்க்கும் பகிருவதுபோல் வைக்காதீர்கள்.
உங்களுக்கு நெருக்கமான உறவு, நண்பர்களிடம் கடவுச் சொல்லை ஷேர் செய்யாதீர்கள். காதலர்களுக்குள்ளும் கடவுச் சொல்லைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள். பொதுவான உறவு மற்றும் நண்பர்களுக்கு எளிதில் கண்டுபிடிக்கும் வகையிலும் கடவுச் சொல்லை உருவாக்காதீர்கள். அதேபோல் எதிலும் கடவுச் சொல்லை ஷேர் செய்யாதீர்கள். கணினியிலும் பயன்படுத்தியவுடன் லாக் அவுட் ( log out ) செய்துவிட்டு செல்லுங்கள். அலுவலகங்களில் கடவுச் சொல்லை உங்கள் கணினியிலேயே சேவ் (save ) செய்து வைக்காதீர்கள்.
உங்களின் தனிப்பட்ட விஷயங்களை பதிவு செய்கிறீர்கள் எனில் அதில் கவனமாக செயல்படுங்கள். அவற்றை அனைவரும் காணுமாறு இல்லாமல் நீங்கள் மட்டும் அல்லது நண்பர்கள் மட்டும் பார்க்கக் கூடிய வகையில் ஆப்ஷன்களை செட் செய்து வையுங்கள். உங்களின் தகவல் திருட்டைத் தடுக்க அதுதான் சிறந்த பாதுகாப்பு.
நீங்கள் எந்த விஷயத்தை ஷேர் செய்வதாக இருந்தாலும் பல முறை யோசித்து , படித்துப் பார்த்துவிட்டு ஷேர் செய்யுங்கள். ஏனெனில் அது மற்றவர்களுக்கு உங்களைப் பற்றி அபிப்ராயத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.
கணினியில் வேலை முடிந்து விட்டதெனில் உடனே லாக் அவுட் செய்து விடுங்கள். பக்கத்தில் எங்கேயாவது செல்வதாக இருந்தாலும் ஃபேஸ்புக், ட்விட்டர்களை லாக் அவுட் செய்துவிட்டுச் செல்லுங்கள்.