அறிமுக இயக்குனர் எஸ்.ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ராட்சசி’ டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
அறிமுக இயக்குநர் எஸ்.ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ராட்சசி. ஜோதிகா தலைமை ஆசிரியராக நடித்துள்ள இந்த படத்தின் முதல் வெளியீட்டை படக்குழு நேற்று (31) வெளியிட்டது.
அதன்படி வெளியான ‘ராட்சசி’ டிரைலர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் பரவலாகி வருகிறது. மேலும் இதில் ஜோதிகா, கீதா ராணி என்ற துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த டிரைலரில் ஜோதிகா பாட்டில் உடைப்பது, கம்பீரமாக பேசுவது என நடிப்பில் அசத்தி இருக்கிறார். கீதா ராணி ரொம்ப திமிர்ல என்ற வசனம் ரசிக்க வைத்திருக்கிறது.
இந்த படத்தில் ஜோதிகாவுடன் பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரிஷ் பேரடி, கவிதா பாரதி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
https://www.youtube.com/watch?v=mC9e7ywzvnU
Eelamurasu Australia Online News Portal