சில தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவு நீரில், கடல் நீரை விட அதிகமான உப்பு இருக்கும். இந்த, ‘மிகை உப்புக் கரைசல்’ பூமியின் மேல் மண்ணை மலடாக்கி, நிலத்தடி நீரை நச்சாக்கி விடும். மிகை உப்புக் கரைசலை வடிப்பதற்கு, ஒரு புதிய வேதியியல் முறையை, நியூயார்க்கிலுள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்,கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு துரப்பணம், பெட்ரோலிய எரிபொருட்களை பயன்படுத்தும் ஆலைகள், குப்பை மேடுகளை வேதி முறையில் கரைக்கின்றன.உள்நாட்டு நிலப் பகுதியில் கடல் நீரை உப்பு நீராக்கும் ஆலை போன்றவற்றில் மிகை உப்புக் கரைசல், கழிவின் மூலம் வெளியேறுகிறது.உலகெங்கும் அதிகரித்து வரும் மிகை உப்புக் கரைசல் கழிவுப் பிரச்னைக்கு, அதே கரைசல் முறையில் உருவாக்கப்பட்டுள்ள தீர்வு எளிமையானது.
டி.எஸ்.எஸ்.இ., எனப்படும் வெப்ப மாறுபாட்டுக் கரைசல் வடிகட்டி முறை, வெப்பத்தைக் கூட்டி, குறைத்தால், நீரில் கரையும் திறன் கூடவும், குறையவும் செய்யக்கூடிய அடர் கரைசலை, விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.இதை, மிகை உப்புக் கரைசல் நிரம்பிய கலனில் போட்டால் மிதக்கும். கலனின் வெப்பத்தை அதிகரிக்க, நீரில் உள்ள உப்பு, மிதக்கும் கரைசலோடு சேர ஆரம்பிக்கிறது. கலனின் அடியில் சுத்தமான நீர் சேர ஆரம்பிக்கும். அந்த நீரை குழாய் மூலம் எடுத்துக் கொள்ளலாம்.
இந்த முறைக்கு, சூரிய ஒளி குவியக் கருவி அல்லது ஆலையில் வீணாகும் வெப்பம் போன்றவற்றை பயன்படுத்த, கழிவிலிருந்து உப்பை நீக்க, நல்ல நீரைப் பெற முடியும். இந்த சுத்திகரிப்பு முறை பரவலானால், அதிக செலவின்றி நல்ல நீரைப் பெறுவதோடு, மண்ணையும், நிலத்தடி நீரையும் நச்சிலிருந்து காக்க முடியும்.