வெங்கட் பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கசட தபற படத்தில் தமிழ் சினிமாவில் பிரபல படத்தொகுப்பாளர்கள் 6 பேர் பணியாற்றியிருக்கின்றனர்.
பிளாக்டிக்கெட் கம்பெனி சார்பில் இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இணைந்து தயாரித்துள்ள படம் `கசட தபற’. சிம்புதேவன் இயக்கியிருக்கும் இந்த படம் 6 முக்கியக் கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது.
படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மற்றும் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தில் தமிழ் சினிமாவின் பிரபல படத்தொகுப்பாளர்கள் 6 பேர் பணியாற்றியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
மு.காசி விஸ்வநாதன், ராஜா முகமது, ஆண்டனி, பிரவீன்.கே.எல்., ரூபன், விவேக் ஹர்ஷன் உள்ளிட்ட 6 பேரும் ஒரே கதையில் பணியாற்றியிருப்பதாக பிரபல படத்தொகுப்பபளரான ஸ்ரீகர் பிரசாத் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
ஜெய், சிவா, வைபவ், பிரேம்ஜி, விஜயலட்சுமி, அஜய் மாஸ்டர் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
Eelamurasu Australia Online News Portal
