60 தமிழர் அமைப்புகள் இணைந்து ஒருமைப்பாட்டு பிரகடனம்!!

முள்ளிவாய்க்கால் நினைவுநாளின் பத்தாவது ஆண்டில், இன்று சனிக்கிழமை 18 – 05 – 2019 அறுபதிற்கும் மேற்பட்ட புலம்பெயர்வாழ் தமிழர் அமைப்புகள் இணைந்து ஒருமைப்பாட்டு பிரகடனம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

ஆங்கில வடிவம்:
On 18 May 2019, ten years since the Sri Lankan state’s genocide against the Tamil nation reached its peak, we stand in solidarity with our brethren in their quest for justice.

We believe that an independent international investigation is the only credible path to achieve criminal accountability and justice for mass atrocity crimes committed against the Tamil people, including for over 146,679 Tamil people unaccounted for during the final stages of the war in the Vanni region.

Sri Lanka’s continuing state oppression and persecution of the Tamil people and its persisting military occupation of the Tamil homeland only further justifies the Tamil nation’s struggle for self-determination.

We declare today that we will stand in solidarity with the Tamil victims and survivors, and pledge to continue to strive for peace, justice and freedom for the Tamil nation.

தமிழ் வடிவம்:
தமிழர் தேசத்துக்கு எதிராக சிறீலங்கா அரசு முள்ளிவாய்க்காலில் மேற்கொண்;ட இனஅழிப்பு இடம்பெற்று பத்து ஆண்டுகள். இத்தருணத்தில், நீதிக்காக போராடிக்கொண்டிருக்கும் உறவுகளுடன் நாமும் ஒருமைப்பாட்டோடு இணைந்துள்ளோம்.

தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனஅழிப்பு உள்ளிட்ட பாரிய அட்டூழியங்களுக்கான குற்றவியல் பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான நம்பகமான வழி சுதந்திரமான சர்வதேச விசாரணையே என நாம் நம்புகிறோம். நேர்ந்த கதி என்னவென்று இன்றுவரை தெரியாத 146,679 பேருக்குமான நீதியும், சுதந்திரமான சர்வதேச விசாரணை மூலமே அடைய முடியும் என நாம் நம்புகிறோம்.

தமிழ் மக்களுக்கு எதிராக தொடரும் சிறீலங்கா அரசின் அடக்குமுறையும், தமிழர் தாயகத்தில் நிலவும் இராணுவ ஆக்கிரமிப்பும், தமிழர் தேசத்தின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை மீண்டும் நியாயப்படுத்துகின்றன.

இனஅழிப்பிலிருந்து தப்பி வாழும் தமிழர்கள் மற்றும் இனஅழிப்பினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் நாம் ஒருமைப்பாட்டுடன் இணைந்து நிற்கின்றோம் என்பதை இந்நாளில் பிரகடனப்படுத்துதோடு, தமிழர் தேசத்திற்கான சமாதானம், நீதி மற்றும் சுதந்திரத்துக்காக தொடர்ந்தும் போராடுவோம் என உறுதிபூணுகிறோம்.

பிரகடனம் செய்யும் தமிழர் அமைப்புகளின் விபரங்கள் – https://tamildiaspora.wixsite.com/decofsolidarity