பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா நடித்து வரும் புதிய படத்தின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.
மைனா, கயல், கும்கி ஆகிய படங்களின் இயக்குனரான பிரபு சாலமன் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் உருவாகி வரும் புதிய படத்தில் ராணா டகுபதியின் வயதான தோற்றம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராணா டகுபதி, விஷ்ணு விஷால், சோயா ஹுசைன் ஆகியோர் நடிக்கும் இப்படத்திற்கு தமிழில் ‘காடன்’ என்றும் தெலுங்கில் ‘அரன்யா’ என்றும் இந்தியில் ‘ஹாத்தி மேரே சாத்தி’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
ராணா மூன்று மொழிகளில் நாயகனாகவும், சோயா ஹுசைன் மூன்று மொழிகளில் நாயகியாகவும், விஷ்ணு விஷால் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
Eelamurasu Australia Online News Portal
