தடகள போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்த பிடி.உஷாவின் வாழ்க்கையை திரைப்படமாக உருவாக்கும் பணிகளில் இயக்குநர் ரேவதி வர்மா ஈடுபட்டுள்ள நிலையில், அதில் கத்ரீனா கைப் நடிக்கவிருக்கிறார்.
தடகள போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்தவர் பிடி.உஷா. கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இவர் இந்திய விளையாட்டு வரலாற்றில் தவிர்க்க முடியாத வீராங்கனை. தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் இதுவரை 103 பதக்கங்களைக் குவித்துள்ளார்.
இயக்குனர் ரேவதி வர்மா பி.டி.உஷாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கப்போவதாக அறிவித்து இருந்தார்.
அந்த பயோப்பிக்கில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. பிரியங்கா ஏற்கெனவே குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் பயோபிக் படத்தில் நடித்தார். தற்போது பி.டி.உஷா பயோபிக்கில் கத்ரீனா கைப் நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

மலையாளம் மற்றும் தமிழ் படங்களை இயக்கும் ரேவதி வர்மா சமீபத்தில் மும்பைக்கு சென்று இருக்கிறார். கத்ரீனா கயூபிடம் பி.டி.உஷா பயோபிக்கின் கதையை கூறி இருக்கிறார். கத்ரீனாவுக்கும் கதை பிடித்துவிட்டது. இது பற்றிய அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.
கத்ரீனா தற்போது சூர்யவன்ஷி படத்தில் நடித்து வருவதால் அதன் படப்பிடிப்பு முடிந்ததும் பி.டி.உஷா பயோபிக்கில் அவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கத்ரீனா நடிக்கும் முதல் பயோபிக் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal