விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சமீபத்தில் வெளியான “தாதா 87” படத்தில் திருநங்கையாக நடித்த நடிகை ஸ்ரீ பல்லவிக்கு பாராட்டுக்கள் குவிந்த நிலையில், தேசிய விருதுக்காக அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி, ஸ்ரீ பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான “தாதா 87” திரைப்படம் மார்ச் 1 அன்று வெளியாகியது.
இந்த படத்தில் திருநங்கை வேடத்தில் நடித்திருந்தார் கதாநாயகி ஸ்ரீ பல்லவி. அதுவே இப்படத்தின் பலமாகவும் அமைந்தது. இந்திய சினிமா வரலாற்றில் ஆண், பெண் வேடத்திலும், பெண், ஆண் வேடத்திலும் நடித்துள்ளனர், ஆனால் ஒரு பெண் திருநங்கை வேடத்தில் நடித்துள்ளது இதுவே முதல் முறை. ஸ்ரீ பல்லவியின் இந்த துணிச்சலான முடிவுக்கு பலதரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் திருநங்கையாக நடித்து பாராட்டு பெற்ற ஸ்ரீபல்லவி 2018-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் ‘தாதா 87’ படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Eelamurasu Australia Online News Portal