ஸ்ருதிஹாசன் நடிகை மட்டுமல்ல பாடகியும் கூட. அவர் இதற்கு முன் 7ம் அறிவு, 3, என்னமோ ஏதோ, மான் கராத்தே, புலி, வேதாளம்' ஆகிய படங்களில் சூப்பர் ஹிட்டான பாடல்களைப் பாடியுள்ளார். யாராவது பாட அழைத்தால் மட்டுமே பாடும் ஸ்ருதிஹாசன் அடுத்து தமன்னாவுக்காக பாட உள்ளார்.
விஷால் ஜோடியாக தமன்னா நடித்து வரும் கத்திச் சண்டை படத்தில்தான் ஸ்ருதிஹாசன் பாட உள்ளாராம்.
தமிழில் தமன்னாவுக்காக ஸ்ருதி பாட உள்ள முதல் பாடல் இது. இந்தப் படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடல் ஒன்று நாளை மறுநாள் 29ம் தேதி வெளியாக உள்ளது.
படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலை ஸ்ருதிஹாசன் பாடினால் நன்றாக இருக்கும் என படத்தின் இயக்குனர் சுராஜ் சொன்னாராம். உடனே ஸ்ருதியை அணுகியிருக்கிறார்கள், அவரும் பாடுவதற்கு சம்மதித்துள்ளார். இன்னும் சில தினங்களில் அந்தப் பாடலைப் பதிவு செய்ய உள்ளார்கள். கத்திச் சண்டை படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.
Eelamurasu Australia Online News Portal