சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் விஸ்வாசம் படமும் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் சமீபகாலமாக கதை திருட்டு சர்ச்சைகள் அதிகரித்து வருகின்றன. சர்கார் கதை திருட்டு விவகாரம் ஐகோர்ட்டு வரை போனது. அடுத்து விஜய் சேதுபதி திரிஷா நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற 96 படத்துக்கும் கதைத்திருட்டு பிரச்சினை வந்தது.
தற்போது அஜித், நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருக்கும் விஸ்வாசம் படத்துக்கும் இதே சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கணவனின் வன்முறை குணத்தால் அவரை பிரிந்து மகனுடன் தனியாக வாழ்கிறாள் மனைவி. மனைவியின் கோபத்தால் தன் சொந்த மகனிடமே தான் யார் என்ற உண்மையை மறைத்து பழகுகிறார் அப்பா.

பின்னர் மகனுக்கு ஒரு பிரச்சினை ஏற்பட அதை தந்தை எப்படி சரி செய்கிறார்? மீண்டும் அந்த குடும்பம் எப்படி இணைகிறது என்பது 2007-ம் ஆண்டு வெளியான துளசி படத்தின் மையக்கரு. இந்த படத்தில் வெங்கடேஷ்-நயன்தாரா இருவரும் கணவன் மனைவியாக நடித்து இருந்தனர்.
இந்த கதைதான் விஸ்வாசம் படத்தின் மையக்கதையும் கூட. 10 ஆண்டு இடைவெளி இருப்பதால் திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்து இருக்கிறார்கள். மையக்கரு இரண்டு படங்களுக்கும் ஒன்றுதான். ஆனால் டைட்டிலில் கதையை எழுதியவர்களாக சிவா மற்றும் ஆதி நாராயணனின் பெயர்கள்தான் இடம்பெற்றுள்ளன. இது கூடிய விரைவில் பிரச்சினையை கிளப்புமா அல்லது உரிமம் பெற்றுதான் படத்தை எடுத்தார்களா என்பது போக போகத் தான் தெரிய வரும்.
Eelamurasu Australia Online News Portal