நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு கூடவுள்ள நிலையில் பாராளுமன்றத்தில் கடந்த வருடத்தில் ஏற்பட்ட மோதல் நிலைமை தொடர்பில் ஆராயும் குழு இன்று மீண்டும் கூடவுள்ளது.
அதன்படி இந்தக் குழுவானது இன்று காலை 9.30 மணியளவில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடவுள்ளது.
கடந்த வருடம் நவம்பர் மாதம் 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இடம்பெற்ற மோதல்களால் தொடர்பில் விசாரணை செய்ய சபாநாயகரினால் நியமிக்கப்பட்ட குழுவினால், இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் சம்பவத்துடன் தொடர்புடைய சி.சி.ரி.வி காணொளிகள், மற்றும் ஊடகங்களிடமிருந்து பெறப்பட்ட காணொளிகள் என்பன பரீசீலிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal