அப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய புதிய ஐபேட் மினி மற்றும் 9.7 இன்ச் ஐபேட் சாதனங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்பிள் நிறுவனம் ஐந்தாம் தலைமுறை ஐபேட் மினி சாதனத்தை அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டிற்குள் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து இரண்டு என்ட்ரி-லெவல் ஐபேட் மாடல்கள் இருவித வெர்ஷன்களில் அறிமுகமாகலாம் என தெரிகிறது.
ஐபேட்களின் விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கில், ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலையில் ஐபேட் மினி 5 சாதனத்தை அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டிற்குள் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. இதற்கென அதிகளவு ஐபேட் மினி சாதனங்களின் உற்பத்தி டிசம்பர் மாத இறுதியில் துவங்கும் என கூறப்படுதிறது.
அப்பிள் நிறுவனம் செப்டம்பர் 2015 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை தனது சிறிய ஐபேட் மாடலை அறிமுகம் செய்யவில்லை. ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ அக்டோபர் மாதத்தில் வெளியிட்டிருந்த தகவல்களில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய ஐபேட் மினி, குறைந்த விலை டிஸ்ப்ளே பேனலுடன் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என தெரிவித்திருந்தார்.
ஆறாம் தலைமுறை 9.7 இன்ச் ஐபேட் மாடலுக்கு மாற்றாக ஆப்பிள் புதிய என்ட்ரி லெவல் ஐபேட் மாடலை அறிமுகம் செய்யலாம். இந்த ஐபேட் மாடலில் 10-இன்ச் டிஸ்ப்ளே மெல்லிய ஃபிரேம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் ஐபேட் சாதனங்களின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில், இரு விலை குறைந்த ஐபேட் மாடல்களை அடுத்த ஆண்டு வெளியிடலாம்.
அந்த வகையில் தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின்படி ஆப்பிள் நிறுவனம் இரண்டு ஐபேட்களின் உற்பத்தி கட்டணத்தை குறைக்கும் நோக்கில் அந்நிறுவனம் கொரியாவில் தயாரிக்கப்படும் எல்.இ.டி. டிஸ்ப்ளேக்களை புதிய சாதனங்களில் வழங்கலாம் என கூறப்படுகிறது.