தொலைபேசி அழைப்பால் பதவியை இழக்கும் நிலையில் சிறிலங்காவின் ஒஸ்ரியா தூதுவர்!

ஐரோப்பிய நாடான ஒஸ்ரியா   தூதுவர்  சிறிலங்காவின் தூதுவர் உட்படஅவரது அதிகாரிகளை உடனடியாக நாட்டிற்கு திருப்பி அழைத்திருக்கின்றார் சிறிலங்கா அரசதலைவர் மைத்ரிபால சிறிசேன.

சிறிலங்கா அரச தலைவருக்கு நேற்று முன்தினம் ஒஸ்ரியாவிற்கான சிறிலங்கா தூதுவர் பிரியானி விஜேசேகரவுடன் அவசரமாக கலந்தரையாட வேண்டிய தேவையொன்று எழுந்திருக்கின்றது.

அவரது உத்தரவிற்கு அமைய ஜனாதிபதி செயலக அதிகாரிகள் ஒஸ்ரியா  தூதுவர் மற்றும் அவரது அதிகாரிகளை தொலைபேசியில்தொடர்பு கொள்ள அழைப்பை எடுத்துள்ளனர்.

எனினும் சமார் நான்கு மணித்தியாலங்களாக மேற்கொண்ட முயற்சிகள்பலனளிக்காத நிலையில், தூதரக காவலாளி ஒருவர் ஜனாதிபதி செயலகத்தின் தொலைபேசிஅழைப்பிற்கு பதிலளித்திருக்கின்றார். அதன்போது தூதுவர் உட்பட அதிகாரிகள் எவரும்அலுவலகத்தில் இல்லை என்ற தகவலைத் தெரியப்படுத்திய காவலாளி, அந்ததகவலை தூதுதுவர் பிரியானி விஜேசேகரவிடமும் தெரியப்படுத்தியிருக்கின்றார்.

இதனையடுத்து அலரி அடித்துக்கொண்டு தூததவர் பிரியானி அரச தலைவர்மைத்ரிபால சிறிசேனவிற்கு தொலைபேசியில் தொடர்புகொள்ள பல தடவைகள் முயற்சித்தும் அந்தமுயற்சி பலனளிக்கவல்லை.

இந்த சம்பவத்தால் கடும் ஆத்திரம் அடைந்துள்ள சிறிலங்கா அரச தலைவர்மைத்ரிபால சிறிசேன அவுஸ்ரேலியாவிற்கான தூதுவர் பிரியானி விஜேசேகரவை உடனடியாகநாட்டிற்கு திருப்பி அழைக்குமாறு வெளிவிவகார அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளார்.இதற்கமைய அவர் திருப்பி அழைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

அதேவேளை தூதுவருடன் தூதரக ஆலோசகர் தயானி மென்டிஸ், உதவியாளர் கெஹான் திஸாநாயக்க, மற்றுமு் தூதுவரின்பிரித்தியேக உதவியாளர் ஆகியொரும் திருப்பி அழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு பதிலாக புதிய தூதுதுவரும், தூதரக அதிகாரிகளும் விரைவில்ஒஸ்ரியா ன் தலைநகர் வியன்னாவிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றுசிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.