அறம், டோரா படங்களுக்குப் பிறகு நயன்தாரா கதையின் நாயகியாக நடித்து வெளியான படம் கோலமாவு கோகிலா. இந்த படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தபோதும், தமிழ்நாட்டில் இப்படத்திற்கு ஓப்பனிங் இருந்தது.
இந்நிலையில், கடந்த 31-ந்திகதி அன்று கோ கோ கோகிலா என்ற பெயரில் இப்படம் தெலுங்கில் வெளியிடப்பட்டது. ஆனால் நயன்தாராவின் நடிப்புக்கு கைதட்டல் கிடைத்தபோதும், படத்திற்கு வரவேற்பு இல்லையாம். அந்த வகையில், தெலுங்கில் இப்படம் பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த நயன்தாராவிற்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.
Eelamurasu Australia Online News Portal