டோக்கியோ பல்கலைக்கழகத்தின் ரோபோ வியல் ஆய்வாளர்கள், புதிய வகை ரோபோவை வடிவமைத்து பரிசோதித்து வருகின்றனர். இந்த ரோபோவுக்கு இரண்டு கால்கள் உண்டு. இருந்தாலும், தன் எடையை சுமந்து நடப்பதற்கு, அது தன் கால்களை மட்டும் நம்பவில்லை.
கூடுதலாக அதன் தலையில், ‘ட்ரோன்’ எனப்படும் குட்டி விமானங்களை பொருத்தியுள்ளனர். எனவே ரோபோவின் எடையில் முக்கால்வாசியை, ட்ரோன் சுமக்க, ரோபோ மிதந்த படியே இரு கால்களால் நடக்கிறது. தங்கள் கண்டுபிடிப்பிற்கு, ‘ஏரியல் பைபெட்’ என, டோக்கியோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.
இரண்டு கால்களைக் கொண்ட ரோபோக்களை நடக்க வைப்பது மிகவும் சிரமமான காரியம். எடை காரணமாக அவை அடிக்கடி கீழே விழுகின்றன. இதனால் தான், ட்ரோன்களை, கிடங்குகளில் பொருட்களை எடுத்துக் கொடுப்பது, பார்சல்கள் கொண்டுபோய் போடுவது போன்ற வேலைகளுக்கு பயன்படுத்தலாம் என, தொழில்நுட்ப வல்லுனர்கள் பரிசோதித்து வருகின்றனர்.
ஆனால், ஏரியல் பைபெட் ரோபோ, 2 கால்களையும், இறக்கைகளையும் கொண்டிருப்பதால், தடுமாறி விழுவது போன்றவை தவிர்க்கப்படும்.
எனவே இதை, பொருட்களை எடுத்து வரும் எடுபிடி வேலைகளைச் செய்ய வைப்பது முதல் பொழுதுபோக்கு மையங்களில் வேடிக்கை காட்டுவது வரை, பயன்படுத்தலாம் என, அதன் கண்டுபிடிப்பாளர்கள் கருதுகின்றனர்.
Eelamurasu Australia Online News Portal