ஸ்மாரட் போனைக் காக்க ஒரு ஸ்மார்ட் கேஸ்!

மொபைல் போன்கள் கீழே விழுந்தாலும் உடையாமல் இருக்க ,புதிய மொபைல் கேஸை கண்டுபிடித்துள்ளனர்.

.இந்த மொபைல் கேஸ், ஸ்மார்ட் போன் கீழே விழுவதை தானாக அறிந்து கொண்டு அதில், பொருத்தப்பட்டு இருக்கும் ஸ்ப்ரிங், போனின் நான்கு முனைகளிலும் விரிந்துகொள்ளும். போன் கேஸில் உள்ள ஸ்பிரிங்குகள் போனில் ரேக்கு ஏற்படுவதையும் அது உடைவதை தடுக்கும். இதனால் கீழே விழும் ஸ்மார்ட் போன் உடையாது.

இந்த மொபைல் கேஸ் விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை ஜெர்மனியை சேர்ந்த பிலிப் ஃபிரென்சில் என்கிற பொறியியல் மாணவர் கண்டுபிடித்துள்ளார்