பொலராய்டு ஜிப் மொபைல் பிரிண்டர் நம்மிடம் இருந்தால் 60 விநாடிகளுக்கு குறைவான நேரத்தில் நாம் மொபைல் போனில் இருக்கும் புகைப்படங்களை உடனடியாக பிரிண்ட் போட்டு எடுத்துக்கொள்ளலாம்.
பொதுவாக நாம் பிரிண்டர் பயன்படுத்துவதற்கு இங் மற்றும் கார்ட்ரிட்ஜை பயன்படுத்துவேம். ஆனால் இந்த பொலராய்டு ஜிப் மொபைல் பிரிண்டரில் ஜிங்க் டெக்னாலஜி அதாவது (zero ink printing technology) உள்ளது. ஜிங்க் பிரிண்டிங் ஷீட் 2 × 3 (சுமார் 5 × 8 cm) கொண்டு நாம் மொபைல் போனில் இருக்கும் படங்களை polaroid print app மூலம் புகைப்படங்களாக பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்.
இந்த பிரிண்டர் மூலம் எடுக்கும் புகைப்படங்களுக்கு ஒரு சிறப்பு உள்ளது. இந்த பிரிண்டர் மூலம் எடுக்கும் புகைப்படங்களில் தண்ணீர் பட்டலும் அல்லது நீரில் முழ்கினாலும் ஒன்றும் ஆகாது. ஏனெனில் இது ”Water Proof” ஆகும். போட்டோ பேப்பரை கிழிக்கவும் முடியாது “Tear proof” ஆகும்.
மேலும் நீங்கள் எடுக்கும் புகைப்படங்களை உங்களுக்கு எற்றவாறு அதில் கொடுக்கப்பட்டுள்ள அப்பிளிகேஷன் மூலம் நிறம், வடிவமைப்பை மாற்றி உங்களுக்கு பிடித்த மாதிரி, பிரிண்ட் போட்டு எடுத்துக் கொள்ளலாம்.
பொதுவாக சில வருடங்களுக்கு முன் எடுத்த சில புகைப்படங்களை நாம் சென்டிமென்டாக வைத்திருப்போம். அதுவே சில ஆண்டுகளுக்கு பிறகு எடுத்து பார்த்தால் பழுப்பு ஏறிவிடும். அல்லது முனை மடங்கி சேதம் ஏற்பட்டு இருக்கும். அல்லது கிழிந்து போய் இருக்கும். அப்படி ஒரு நிலையை மாற்ற இந்த பிரிண்டர் நமக்கு மிகவும் பயன்படும்.