பைலட் பிக்சிங் எரேசபில் பென். இந்த வகை பென் மாணவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். பொதுவாக மாணவர்கள் தேர்வு நேரங்களில் எழுதிக்கொண்டு இருக்கும் பொழுது தவறு எதும் வரமால் எழுதுவதற்கு மிகவும் கவனமுடன் செயல்படுவார்கள்.
அப்பொழுது எழுதிக்கொண்டு இருக்கும் பொழுது ஏதேனும் தவறாகிவிட்டல் ஏதேனும் ஒரு ரப்பரை கொண்டு அதனை அழித்து திருத்துவார்கள். ஆனால், அழித்த இடத்தில் பேப்பர் சற்று அழுக்காகலாம் அல்லது சில நேரங்களில் சேதமடைந்து துளை விழலாம். இது. பார்ப்பவர் கண்களுக்கு குறிப்பாக விடைத்தாளை திருத்தும் ஆசிரியருக்கு சற்று அதிருப்தியைத் தரலாம்.
இது போன்று பிரச்சனைகளை எரேசபில் பென்னைக் கொண்டு எளிதாக மாணவர்கள் சமாளிக்கலாம். நாம் எழுதிக் கொண்டு இருக்கும் பொழுது தவறு நடந்தால் பைலட் பிக்சிங் எரேசபில் பென்னில் உள்ள ரப்பரைக் கொண்டு அளித்தால் அந்த இடத்தில் திருத்தி எழுதப்பட்டது போன்று எதுவும் தெரியாது.
பேப்பர் எந்த ஒரு சேதம் இல்லாமல் இருக்கும். ஏன்னென்றால் இந்த பென் பிக்சிங் ரெவொலுஷனரி (revolutionary) எரேசபில் இங் தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கி உள்ளனர். அதனால் எளிதில் திருத்தி எழுதிக்கொள்ளலாம்.