பி.யு.பி. (PUP) ஸ்கேனர்!

நாம் பொதுவாக ஆவணங்களை ஸ்கேன் செய்வதற்கு பெரிய ஸ்கேனிங் இயந்திரம் தேவைப்படும். அதுவும் நாம் ஒரு இடத்தில் இருந்து ஸ்கேனிங் இருக்கும் இடத்திற்கு சென்றுதான் ஆவணங்களை ஸ்கேன் செய்ய முடியும். தற்பொழுது நாம் மிக எளிமையாக ஸ்கேன் செய்வதற்கு புதிய ஸ்கேனர் ஒன்று அறிமுகம் செய்துள்ளனர்.

அது தான் பி.யு.பி. ஸ்கேனர். இதை உங்கள் சட்டைப் பையில் வைத்துக் கொள்ளலாம். எளிதாக கையாள கூடியவை. எங்கு வேண்டுமானலும் எடுத்துச் செல்லலாம். இது வயர்லெஸ் டைப் ஸ்கேனர் ஆகும்

பி.யு.பி. ஸ்கேனரில் நாம் ஒரு முறை மின்சக்தியை சார்ஜ் செய்தால் 1000 பக்கங்கள் வரையிலான ஆவணங்களை ஸ்கேன் செய்யலாம். ஒரு கிளிக்கில் ஆவணங்களை ஸ்கேன் செய்ய முடியும். இதில் ப்ளூ டூத், வை-பை இணைப்பும் உள்ளது.

நாம் இந்த பி.யு.பி ஸ்கேனரில் ஸ்கேன் செய்த ஆவணைங்களை உங்கள் கணினி மற்றும் லேப்டாபிற்கு பரிமாற்றி கொள்ளலாம். ஸ்கேனர் ஒன்றின் விலை $299 ஆகும். (இந்திய ரூபாயின் மதிப்புப்படி 20,000 ஆகும்)