தமிழிலும் இன்டர்நெட் டொமைன் அறிமுகம்!

இந்தியாவில் இனி தமிழிலும் இன்டர்நெட் டொமைன் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வசதி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

உலகில் இணையம் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையில் தமிழர்களும் கணிசமாக இருக்கிறார்கள். அதேபோல், தமிழ்நாட்டு மக்கள் இணையத்தில் அதிக அளவில் தமிழை பயன்படுத்துகிறார்கள்.

பெரும்பாலான ஆங்கில பக்கங்கள் எல்லாம் தற்போது தமிழில் வந்துள்ளது. இந்த நிலையில் இந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

டொமைன் என்றால் என்ன?

இணையத்தில் பொதுவாக கூகுளில் எல்லா மொழியிலும் சர்ச் செய்ய முடியும். ஆனால் டொமைன் எனப்படும், இணையதள பக்கங்களின் லிங்குகள் மட்டும் ஆங்கிலம் போன்ற சில முக்கிய மொழியில் மட்டுமே இருக்கும்.

எடுத்துக்காட்டாக, ஒன்இந்தியா என்று கூகுளில் தேடினால் கிடைக்கும். ஆனால் ஓன்இந்தியா தமிழின் டொமைன், ”https://tamil.oneindia.com” என்று ஆங்கிலத்தில் மட்டுமே பதிவு செய்ய முடியும்.

 

தமிழில் வருகிறது

இந்த நிலையில்தான் தற்போது தமிழ் மொழியை இந்த டொமைனில் பயன்படுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதவாது ”https://தமிழ்” ”https://அழகு” என்று இணைய பக்கங்களை தமிழிலேயே உருவாக்கிக் கொள்ள முடியும். உலகில் சில மொழிகளுக்கு மட்டுமே இந்த வசதி உள்ளது.

 இந்திய மொழிகள்

மொத்தமாக இந்தியாவில் உள்ள 22 மொழிகள் இப்படி இணையத்தில் டொமைனாக சேர்க்கப்பட உள்ளது. தென்னிந்திய மொழிகள் எல்லாம் இதில் அடக்கம். தற்போது குஜராத்தி, கன்னடா, தெலுங்கு உள்ளிட்ட சில மொழிகள் மட்டும் சோதனை செய்ய வெளியிடப்பட உள்ளது.

ஏன் இந்த வசதி

தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் மக்கள் அதிக அளவில் இணையம் பயன்படுத்துகிறார்கள். அவர்களை கவரவே இந்த வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. அடுத்த மாதம் இந்த வசதி அதிகாரப்பூர்வமாக வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.