அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியவர்கள் முழுமையான தகவல்களைப் பெற வாய்ப்பு!

அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரியவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்படுவதுடன் அவர்கள் நாட்டுக்கும் திருப்பி அனுப்பப்பட்டும் வருகின்றனர்.

புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் தொடர்பாக புதிய அறிவிப்புகளை அவுஸ்திரேலிய அரசு அண்மையில் வெளியிட்டிருக்கிறது.

TPV எனப்படும் தற்காலிக விசா காலாவதியாவதற்கு முன்னரே இந்த விசா புதுப்பிப்பதற்கான விண்ணப்பம் செய்யப்பட வேண்டும்.

அத்துடன் நிரந்தர வதிவிட உரிமை கொண்டவர்கள் குடியுரிமை பெறும் விண்ணப்பங்களுக்கான நிபந்தனைகள் கடினமாக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இது குறித்து அறிந்து கொள்வதற்கு ஏதுவாகவும், விசா குறித்த விடயங்கள் பற்றி தெளிவு பெறுவதற்கும் அவுஸ்திரேலியத் தமிழர் பேரவையும் தமிழ்த் தகவல் மையமும் இணைந்து தகவல் மாலை ஒன்றை ஏற்பாடு செய்துள்ளன.

இந்த மாற்றங்கள் குறித்த விளக்கங்களைக் கொடுப்பதற்கும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கவும் என பல முக்கிய வழக்குகளை கையாண்ட மெல்போர்ன் குடிவரவு சட்டத்தரணி ஒருவர் கலந்து கொள்ளவுள்ளார்.

இதேவேளை அவுஸ்திரேலியத் தமிழர் பேரவையின் பாலா விக்னேஸ்வரனும் பங்குபற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்கள் இம்மாற்றங்கள் பற்றிய தகவல்களை அறிய விரும்புவோர் இந்தத் தகவல் மாலையில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வானது எதிர்வரும் ஜூலை 29 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 3:00 மணியிலிருந்து 5:00 மணி வரை நடைபெறவுள்ளது.

பெண்டில் ஹில் தொடருந்து நிலையத்தின் அருகில் உள்ள யாழ் மண்டபத்தில் (Yarl Function Centre , 221A, Wentworth Avenue, Pendle Hill) நடைபெறவுள்ளது