ஜப்பானை சேர்ந்த 7 மாத குழந்தை ஒன்றின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் மிகவும் அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது.
ஜப்பானை சேர்ந்த 7 மாத குழந்தை சான்சோ. கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஜப்பானில் பிறந்த இக்குழந்தை பிறக்கும் போதே அதிக தலைமுடியுடன் பிறந்துள்ளார் என அந்நாட்டு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
சான்சோ பிறந்தது முதல் அவரது புகைப்படங்களை @babychanco என்னும் இன்ஸ்டாகிராம் கணக்கின் பெயரில் அவரது குடும்பத்தார் பகிர்ந்து வருகின்றனர்.
இவரது அழகிய புன்னகைக்கும், அழகிய புகைப்படங்களுக்கு ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இணையத்தில் குவிந்துள்ளனர்.
இந்நிலையில் இவரது இன்ஸ்டாகிராம் கணக்கினை தற்போது 101,000 பயனர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். சுமார் 47 புகைப்படங்களை கொண்ட இவரது கணக்கில் இருக்கும் ஒவ்வொரு புகைப்படமும் 10,000 லைக்குகளை லாவகமாக பெற்று வருகின்றது.
இணையத்தில் ட்ரெண்டாகும் சான்சோவின் அழகிய புகைப்படங்கள்.