ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு சீனா 112 கோடி ரூபா கொடுத்த விவகாரம் குறித்து நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையிடம் ஐக்கிய தேசிய கட்சி ஆதாரங்களை கோரியுள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உரையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ விளக்கமளிக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி குறிப்பிட்டுள்ளது.
இதே வேளை மஹிந்த ராஜபக்ஷவிற்கு சீனா நிதி வழங்கியமை தொடர்பாக வெளியிட்ட செய்தியின் மூலங்களை தருமாறு நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையிடம் உத்தியோகப்பூர்வமாக கோரப்பட்டுள்ளது.
குறித்த நிதி பரிமாற்றம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவும் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் செய்தி தொடர்பான மூலங்கள் மிகவும் அவசியமாகின்றது என நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவிற்கு 7.6 பில்லியன் டொலர்களை சீனா வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ள நிலையிலேயே ஐக்கிய தேசிய கட்சி நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையிடம் உதவி கோரியுள்ளது.