விசா கட்டணங்களில் அதிரடி மாற்றம்: அவுஸ்திரேலிய அரசின் முடிவு!

அவுஸ்திரேலியாவில் சில விசாக்களுக்கான கட்டணங்கள் அதிகரிகப்படுகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாட்டின் பணவீக்கத்திற்கேற்ப 4 ஆண்டுகளில் 410 மில்லியன் டொலர் வருவாய் ஈட்டும் நோக்கில் விசா கட்டண உயர்வு அமையும் என கூறப்பட்டிருந்தது.

இதனை கடந்த ஆண்டு கருவூலக் காப்பாளர் Treasurer Scott Morrison அறிவித்திருந்தமைக்கு இணங்க இக்கட்டண அதிகரிப்புக்கள் இவ்வருடமும் உயருமென கூறப்படுகிறது.

குறிப்பாக மணத்துணையை நாட்டுக்குள் அழைப்பதற்கான விசா கட்டணம் $7,000 இலிருந்து $7160 ஆக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பெற்றோர் விசா subclass 103 மற்றும் Other family visas subclass 114, 115 -க்கான கட்டணம் $3,945 இலிருந்து $4,035 ஆக உயர்வடைகிறது என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜூலை முதலாம் திகதியிலிருந்து இந்த முறை நடைமுறைக்கு வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விசாக்களுக்கு உயர்த்தப்பட்ட பழைய மற்றும் புதிய கட்டண விபரங்கள் இதோ.