தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில்இ அவுஸ்திரேலிய பிரஜை (37) ஒருவரும் நான்கு வயது சிறுமி ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (20) காலை 5 மணியளவில் எம்பிலிப்பிட்ட காவல் துறை பிரிவுக்கு உட்பட்ட குருந்துகஹஹெதெக்ம பிரதேசத்தில்இ கெட்டாவையில் இருந்து காலி நோக்கி சென்ற வேன் விபத்துக்குள்ளாகியுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக வீதியின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றின் பின்புறத்தில் வான் மோதியுள்ளது.
விபத்தில் வானில் பயணித்த அவுஸ்திரேலிய பிரஜைகள் நால்வரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏனையவர்கள் களுத்துறை நகொடை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
Eelamurasu Australia Online News Portal