பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் சீ 350 முதல் சீ 360 வரையான பகுதிகள் சபாநாயக ர் கரு ஜயசூரியவிடம் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ இன்று கையளித்துள்ளார்.
அர்ஜுன் அலோசியஸிடம் இருந்து பணம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வௌியிட வேண்டும் என்று எழுந்துள்ள சர்ச்சையை அடுத்து இந்த அறிக்கை சபாநாயகரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.