குழந்தை பிறப்பை தடுப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் 2 கோடியே 50 லட்சம் பெண்கள் முறையற்ற கருக்கலைப்புகளில் ஈடுபடுவதாக சமீபத்தில் நடைபெற்ற ஆய்வில் தெரியவந்துள்ளது.
சர்வதேச அளவில் பெண்களின் வாழ்க்கை நிலை, உடல் நலம் மற்றும் அவர்களை பாதிக்கும் நோய்கள் குறித்த ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. அதன்படி 1 கோடியே 80 லட்சம் தம்பதிகள் குழந்தை பேறு இன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆண்டுக்கு 20 லட்சம் பெண்கள் ‘எச்.ஐ.வி. எனப்படும் எய்ட்ஸ் கிருமி தாக்குதலுக்கு ஆளாகின்றனர். 2 லட்சத்து 66 ஆயிரம் பெண்கள் கழுத்து புற்று நோய் பாதிப்புக்கு ஆளாகின்றனர் என தெரிய வந்துள்ளது.
சர்வதேச அளவில் மூன்றில் ஒரு பெண்கள் தங்களது கணவன்மார்களின் கொடூர தாக்குதலுக்கு ஆளாகின்றனர். அதே நேரத்தில் பாதுகாப்பு இல்லாத முறையற்ற கருக்கலைப்புகள் அதிக அளவில் நடைபெறுகின்றன.
குழந்தை பிறப்பை தடுப்பதற்காக இதுபோன்று 2 கோடியே 50 லட்சம் கருக்கலைப்புகள் நடக்கின்றன. இவை தவிர 3 கோடி பெண்கள் ஆஸ்பத்திரிகளுக்கு செல்லாமல் சுகாதாரமற்ற முறையில் குழந்தைகளை பெற்றெடுக்கின்றனர்.
இதுபோன்ற குறைபாடுகள் நீக்கப்பட வேண்டும். பாதுகாப்பான முறையான கருக்கலைப்புகள் நடத்தப்பட வேண்டும். அதற்கு சர்வதேச நாடுகள் சட்ட திட்டங்களை உருவாக்க வேண்டும். மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என ஆப்பிரிக்க மக்கள் தொகை மற்றும் சுகாதார ஆய்வு மைய இணை சேர்மன் கலெஸ் இசப் தெரிவித்துள்ளார்.