போர்களில் பயன்படுத்தப்படும் ஏவுகணைகளை ராணுவர வீரர்கள்தான் இயக்கமுடியும். தற்போது இதற்கு பதிலாக ரோபோ ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைன் திட்டமிட்டுள்ளது.
ஏவுகணைகளில் வெடிபொருட்களையும் குண்டுகளையும் நிரப்பிவிட்டால் தானாக முன்னேறி இலக்கை தாக்கும் அளவுக்கு இந்த ரோபோ ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு முதல் இந்த ரோபோக்கள் போர்களில் பயன்படுத்தப்பட இருக்கின்றன. 5 கிலோமீட்டர் வரை உள்ள இலக்கை இந்த ரோபோ ஏவுகணைகள் தாக்குகின்றன. மணிக்கு 38 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது.