அவுஸ்திரேலியக் குடியுரிமை எனும் ஒற்றைக் குடியுரிமை உள்ளவர்கள் மட்டுமே அவுஸ்ரேலியாவின் நாடாளுமன்ற உறுப்பினராக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சென்டர்கள் என்று மொத்தம் ஏழு பேர் தேர்தலில் வென்று நாடாளுமன்றம் சென்றது செல்லாது என்று பிரச்சனை எழுந்தது.
இந்த சட்ட சிக்கலை எவ்வாறு தீர்ப்பது என்று அரசு, நாட்டின் உயர் நீதிமன்றத்தை அணுகியது. அவுஸ்ரேலிய அரசியல் சட்டத்தின் அடிப்படையில் இந்த சட்ட சிக்கலை உயர் நீதிமன்றம் ஆராய்ந்தது.
இரட்டைக் குடியுரிமை கொண்ட ஏழுபேரில் ஐந்து பேரின் நாடாளுமன்ற பதவிகள் செல்லாது என்றும், இருவர் பதவியில் தொடரலாம் என்றும் சற்று நேரத்திற்கு முன் அதிரடித் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பின்படி துணைப் பிரதமர் Barnaby Joyce தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளார்.
ஏற்கனவே ஒரு இடம் மட்டுமே அதிகம் என்ற பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்துவரும் பிரதமர் Malcolm Turnbull தலைமையிலான அரசு, துணைப் பிரதமர் Barnaby Joyce நாடாளுமன்ற உறுப்பினராக தொடர இயலாது என்பதால் தனது பெரும்பான்மையை இழந்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் Malcolm Turnbull தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்தது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பின் அடிப்படையில்,
நேஷனல் கட்சியைச் சார்ந்த துணைப் பிரதமர் Barnaby Joyce, One Nation கட்சி செனட்டர் Malcolm Roberts, Greens கட்சியின் செனட்டர் Larissa Waters, முன்னாள் அமைச்சரும் செனட்டருமான Fiona Nash மற்றும் Greens கட்சியின் செனட்டர் Scott Ludlam ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகக் கடமையாற்றமுடியாது.
அத்துடன் முன்னாள் அமைச்சர் Matt Canavan, செனட்டர் Nick Xenophon ஆகியோர் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக தொடரலாம் என்றும் உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அரசு நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை இழந்திருப்பதால் துணைப் பிரதமர் Barnaby Joyce யின் தொகுதியான New England தொகுதியில் விரைவில்தேர்தல் நடைபெறவுள்ளதாக தெரியவருகிறது