சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்: விரைவில் வெளியாகும் என தகவல்

சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சார்ந்து அந்நிறுவனம் பல்வேறு காப்புரிமைகளை பெற விண்னப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்மார்ட்போன் சந்தையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் பெரும் புரட்சியை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சாம்சங் நிறுவனம் 2018-ம் ஆண்டிலேயே மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களுக்கு என சாம்சங் நிறுவனம் பல்வேறு காப்புரிமைகளை பெற விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரிய அறிவுசார் சொத்துரிமை அமைப்பில் சாம்சங் சார்பில் பிதிவிடப்பட்டுள்ள வரைபடங்கள் LetsGoDigital மூலம் வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. சாம்சங் பதிவிட்டுள்ள வரைபடங்களின் தலைப்பில் மடிக்கக்கூடிய மின்சாதனம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வரைபடங்கள் மடிக்கக்கூடிய கிளாம்ஷெல் வடிவமைப்பு மற்றும் மிகப்பெரிய ஹின்ஜ் கொண்டிருப்பதை வெளிப்படுத்துகிறது.  மேலும் LetsGoDigital வெளியிட்டுள்ள தகவல்களில் இரண்டு டிஸ்ப்ளேக்கள் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

இரண்டு டிஸ்ப்ளேக்களில் ஒன்று ஒருபுறத்தில் இருந்து மடிக்க முடியும், மற்றொரு திரையை வெளிப்புறமாக இருக்கிறது, பிளிப்போன் போன்று மடிக்கும் போது இந்த டிஸ்ப்ளே காட்சியளிக்கும்.

வரைபடங்களில் காணப்படும் ஹின்ஜ் பார்க்க சர்ஃபேஸ் புக் போன்றே காட்சியளிக்கிறது. இந்த ஸ்கிரீன் நடுப்புறத்தில் இருந்து மடிக்கும் போதும் சீராக வேலை செய்யும். தற்சமயம் வெளியாகியுள்ள வரைபடங்கள் மற்றும் வடிவமைப்புகளை கொண்டு பார்க்கும் போது ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையில் பார்க்க பெரியதாக காட்சியளிக்கிறது.

ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையில் மிக பெரியதாக இருப்பதால் பாக்கெட்டில் எடுத்துச் செல்வதில் சிரமம் ஏற்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் சாம்சங் நிறுவனம் சீராக வேலை செய்யும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.