கொட்டுமுரசு

குடும்ப அரசியல் எனும் தொற்று நோய்

ஔவையின் அறிவுறைகள் எக்காலத்துக்கும் பொருந்தும். அவரது நல்வழி நூலின் 22 ஆவது வெண்பா பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக் கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் கூடுவிட்டுங்(கு) ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார் பாவிகாள் அந்தப் பணம் தெற்காசியா ஒரு வித்தியாசமான பிராந்தியம். எளிமையாக இப்பகுதியை இந்த நாடுகள் அனைத்திலும் அறியப்படும் கிச்சிடிக்கு ஒப்பிடலாம். உப்புமா அல்லது கிச்சிடி என்பதற்கு இதுதான் இலக்கணம் என்று எதுவும் இல்லை. எதுவும் எதனுடனும் எப்படியும் தேவைக்கேற்ப சேர்ந்து கொள்ளும். அதன் பொருள் கலவை என்பது. எனினும் கிச்சிடிக்கும் குடும்ப அரசியல் ...

Read More »

இனவெறியை வெறுக்கும் வெள்ளையின இளைஞர்கள்

ஜார்ஜ் ஃப்ளாய்டு மரணத்துக்கு நீதி கேட்டு அமெரிக்கா தொடங்கி உலகம் முழுவதும் நடந்துவரும் போராட்டங்களில், கறுப்பினத்தவர்களுடன் கணிசமான அளவில் வெள்ளையர்களும் பங்கேற்றிருப்பது குறித்துப் பலரும் ஆச்சரியமாகப் பேசி வருகிறார்கள். கறுப்பினத்தவர்களுக்குத் தங்கள் முன்னோர்கள் இழைத்த கொடுமைகளுக்காக அவர்கள் முன்பு மண்டியிட்டு கண்ணீர் சிந்தி மன்னிப்பு கேட்கும் வெள்ளையினத்தவர்களின் வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது. லண்டனில் அடிமை வியாபாரி ராபர்ட் மில்லிகனின் சிலை அகற்றப்பட்டது. வெள்ளையர்களின் இந்தக் குற்றவுணர்வு நிச்சயம் போலியானது அல்ல. உள்நாட்டுப் போரும் கறுப்பின உரிமைகளும் கறுப்பினத்தவர்களின் உரிமைகளுக்காக சக வெள்ளையினத்தவர்களை எதிர்த்துப் ...

Read More »

இந்தியா – சீனா மோதல்: ஒரு வரலாற்றுப் பார்வை!

இந்தியா தன்னுடைய வடக்கு எல்லையில் சீனாவுடன் மூன்று பெரிய பகுதிகளில் நில எல்லைகளைப் பகிர்ந்துகொள்கிறது. நேபாளம், சிக்கிம், பூடான் ஆகிய பகுதிகளை ஒட்டிய எல்லைப் பகுதிகள்தான் எப்போதும் பூசலுக்கும் மோதல்களுக்கும் காரணங்களாக இருக்கின்றன. பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவை ஆண்டபோது, இயற்கை வளங்களைச் சுரண்டி தங்களுடைய நாட்டுக்குக் கொண்டுசெல்ல கடல், நில மார்க்கங்களைப் பயன்படுத்தினர். மேலும் மேலும் நிலப்பரப்புகளைப் போரில் கைப்பற்றினர். அவர்களால் உருவானதுதான் இந்திய-சீன எல்லைப் பிரச்சினையும். பூசல்கள் தொடங்கிய இடம் 1834-ல் டோக்ரா இனத்தைச் சேர்ந்த குலாப் சிங் என்ற சீக்கிய மன்னர் ஜம்மு-காஷ்மீருடன் ...

Read More »

’படப்பிடிப்பு’ என்ற போராட்டத்தின் தேவை

ஏறத்தாள 12 வருடங்களுக்கு முன்னர்…. பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேலியப் படையினரின் சுற்றிவளைப்புகள், வீதியில் போகும் இளைஞர்களைக் கைது செய்து துன்புறுத்தல், தடுத்துவைக்கப்பட்டவர்கள் மீதான சித்திரவதைகள் என,  பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலிய இராணுவத்தின் ஆக்கிரமிப்புகள், அட்டகாசங்கள் நாள்தோறும் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. இவ்வாறு, நாள்தோறும் நிகழும் சம்பவங்கள் எல்லாம், செய்திகளாக வெளியுலகை எட்டுவதில்லை; அடக்குமுறையாளர்கள் மீது தொடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளும் வெற்றி பெறுவதற்கு ஆதாரங்கள் இருக்கவில்லை. அப்போதுதான், பாலஸ்தீன இளைஞர்கள் புதுவகை ஆயுதமொன்றைக் கைகளில் எடுத்தார்கள். கற்களில் இருந்து பீரங்கிகள் வரையிலான ஆயுதங்கள் எல்லாவற்றையும் ...

Read More »

1.7 லட்சம் சீனா ஆதரவு கணக்குகளை அதிரடியாக நீக்கிய ட்விட்டர்

சீனாவுக்கு ஆதரவான 1 லட்சத்து 70 ஆயிரம் ட்விட்டர் கணக்குகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன. இதன் பின்னணி என்ன என்பதும் தெரியவந்துள்ளது. உலகமெங்கும் குறுகிய செய்திகளை பதிவிடுவதற்கு பயன்படும் சமூக வலைதளமாக ட்விட்டர் செயல்படுகிறது. 14 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்த சமூக வலைதளம், அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. ஏறத்தாழ 33 கோடி பேர் இதை பயன்படுத்தி வருகிறார்கள். பிரதமர் மோடி தொடங்கி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், துருக்கி அதிபர் எர்டோகன், சவுதி அரேபிய மன்னர் சல்மான், பிரான்ஸ் அதிபர் மேக்ரான், கனடா பிரதமர் ஜஸ்டின் ...

Read More »

கறுப்பினத்தவரின் உயிர்கள் முக்கியம்: ஒரு இயக்கத்தின் வரலாறு

கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணம் அமெரிக்காவையே உலுக்கிக்கொண்டி ருக்கிறது. அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. கடந்த மே 25 அன்று அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரத்தில் ஒரு வெள்ளையின போலீஸ்காரர் தனது முழங்காலால் ஜார்ஜ் ஃப்ளாய்டின் கழுத்தின் மேலே 8 நிமிடம் 46 நொடிகளுக்கு நின்றது அவரது உயிரைப் பறித்திருக்கிறது. இதனால், ‘கறுப்பினத்தவரின் உயிர்கள் முக்கியம்’ (Black Lives Matter – BLM) என்ற இயக்கம் மறுபடியும் தெருவில் இறங்கியும் சமூக வலைதளங்களிலும் போராட ஆரம்பித்திருக்கிறது. இனவெறியால் ஏற்படும் பாதிப்புகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற ...

Read More »

ரணில் விக்கிரமசிங்கவை அணைக்க முற்படும் ராஜபக்ச ஆட்சி

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு, மகிந்த ராஜபக்ச பிரதமராகப் பதவியேற்றதும் 2009ஆம் ஆண்டு இறுதிப் போரை நடத்திய ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டனரெனத் தமிழர்கள் அங்கலாய்க்கின்றனர். முற்போக்கான சிங்கள மக்கள் மத்தியில் அதிகாரத் துஸ்;பிரயோகத்தில் ஈடுபட்ட ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டனர் என்ற கவலையும், இஸ்லாமியர்கள் என்ற காரணத்தால் தம்மை ஒரங்கட்ட முற்பட்டவர்கள் மீண்டும் பதவிக்கு வந்துவிட்டனர் என்ற அச்சம் முஸ்லிம் மக்கள் மத்தியிலும் உருப்பெற்றதுவிட்டது எவ்வாறாயினும் தமிழ் முஸ்லிம் மக்களைவிட சிங்கள மக்களில் பெரும்பான்மையோர் ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததையிட்டு மகிழ்ச்சியடைந்தனர் ...

Read More »

சிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் 450 பேருக்கு கொரோனா தொற்று

சிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் 450 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. சிங்கப்பூரில் புதிதாக 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 38,965 ஆக அதிகரித்து உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் இதுவரை 26,532 பேர் குணமடைந்துள்ள நிலையில், கொரோனா தொற்று காரணமாக 25 பேர் உயிரிழந்துள்ளனர். சிங்கப்பூரில் உள்நாட்டு மக்களை விட வெளிநாட்டு தொழிலாளர்களே கொரோனாவால் அதிகம் ...

Read More »

இரட்டைக்குழல் துப்பாக்கி

எங்கும் இராணுவம் எதிலும் இராணுவம் என்ற அரசியல் போக்கை ராஜபக்ஷக்கள் ஆழமாகவம் அகலமாகவும் நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளனர். விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நடத்தியபோது, இந்த அரசியல் உத்தி அவர்களுக்குப் பெரிய அளவில் கைகொடுத்திருந்தது. யுத்தத்தில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அதனை அவர்கள் படிப்படியாகக் கடைப்பிடித்து வருவது குறித்து, இந்தப் பத்தியாளரின் எழுத்துக்கள் ஏற்கனவே  வெளிப்படுத்தி இருந்தன. இப்போது அது நிதர்சனமாகி இருக்கின்றது. வெளிப்படையாக சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகி உள்ளது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றியடைந்த ராஜபக்ஷக்கள் இந்த நாட்டின் அரசியல் கதாநாயகர்களாக உருவாகி இருந்தார்கள். யுத்த வெற்றி ...

Read More »

சோதனைச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன! இராணுவ ஆட்சியா ?

முல்லைத்தீவில் வழமைக்கு மாறாக சோதனைச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு தளர்த்தப்பட்ட காலங்களிலும் பல பகுதிகளில் சோதனைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. காவற்றுறையினர் மாத்திரமின்றி மிக அதிகமாக படையினரே சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர் என்று தெரிவித்துள்ள வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன்,வட்டுவாகல் பாலத்தில் ஒரு முனையில் இராணுவத்தினரும், மறு முனையில் கடற்படையினரும் சோதனைகளை மேற்கொள்கின்றனர். சோதனை நடவடிக்கைகளில் இவ்வாறு படையினர் ஈடுபடுத்தப்படுவது இராணுவ ஆட்சி நடைபெறுவது போன்ற தோற்றமே மக்களிடம் ஏற்படுத்தப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளார். கேள்வி :- அண்மையில் நாயாறுப் பகுதிக்குச் சென்று அங்குள்ள மீனவர்களின் பிரச்சினை ...

Read More »