முஸ்லிம்களின் உடல் தகனத்துக்கு எதிராக யாழ்ப்பாணம் – ஐந்துசந்தி பகுதியில் இன்று (25) யாழ் முஸ்லிம் சமூகத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்பி, சட்டத்தரணி க.சுகாஸ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Read More »கொட்டுமுரசு
தமிழ்க் கட்சிகளின் உபாயங்களும் யதார்த்த நிலையும்
ஐ.நா. மனித உரிமைகள் பேரையின் அடுத்த கூட்டத் தொடர் ஆரம்பமாவதற்கு சுமார் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், ஜெனீவா குறித்த இராஜதந்திரக் காய்நகர்த்தல்கள் சூடுபிடித்துள்ளன. 2021 பெப்ரவரி 22 முதல் மார்ச் 19 வரை மனித உரிமைகள் அமைப்பின் 46 ஆவது கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. 47 நாடுகள் அங்கம் வகிக்கும் இந்தக் கூட்டம் ஈழத் தமிழரைப் பொறுத்தளவில் மிகமிக முக்கியமானது. அடுத்ததாக என்ன நடைபெறப்போகின்றது என்பது இந்தக் கூட்டத் தொடரில் தீர்மானிக்கப்படும். இலங்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன், “நல்லாட்சி” பதவிக்கு வந்த ...
Read More »அமெரிக்காவிடம் கடும் நிபந்தணை – சிங்களப் புத்திஜீவிகள் பரிந்துரை
ஜே பைடன் நிர்வாகம் ஜெனீவா மனித உரிமைச் சபையில் மீளவும் இணைந்து இலங்கைக்குக் கடும் அழுத்தம் கொடுக்கும் என்றோ, குறைந்தபட்சம் போர்க்குற்றம் குறித்த சர்வதேச விசாரணை நடக்கும் என்றோ எதிர்ப்பார்க்க முடியாது. ஆனால் ஐ.நா பாதுகாப்புச் சபையின் தீர்மானம் ஒன்றுக்கான முன்மொழிவுக்கு ஈழத்தமிழர்கள் தயாராகி, இலங்கை மேற்கொண்ட குற்றங்கள் அனைத்தினதும் குற்றங்களுக்கான சர்வதேச நீதியைக் கோரத் தலைப்பட வேண்டும். மகிந்த ராஜபக்சவின் ஆட்சியைக் கவிழ்த்து 2015ஆம் ஆண்டு மைத்திரி- ரணில் அரசாங்கத்தை அமைப்பதற்குப் பாடுபட்டிருந்த பொது அமைப்புகளில் ஒன்றான தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் ...
Read More »சொல்லும் செயலும் தமிழரசியலும் ?
ஈழவேந்தன் இப்பொழுது கனடாவில் இருக்கிறார். அவர் முன்பு நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்த பொழுது கிளிநொச்சியில் ஒரு சர்ச்சை எழுந்தது. ஈழவேந்தன் நாடாளுமன்றத்தில் ஆவேசமாக எதிர் தரப்பைச் சாடுவார். ஆனால் நாடாளுமன்ற கன்ரீனில் யாரை எதிர்த்து பேசினாரோ அவரோடு உட்கார்ந்திருந்து தேநீர் அருந்துவாராம். இது தொடர்பில் கிளிநொச்சிக்கு யாரோ முறைப்பாடு செய்திருக்கிறார்கள். இக்காலகட்டத்தில் ஈழவேந்தன் என்னை சந்தித்த பொழுது நான் அவரிடம் சொன்னேன் “மிதவாத அரசியல் என்றால் அப்படித்தான். ஆயுதப் போராட்டம் எதிரியின் இருப்பை அழிக்க நினைக்கும். ஆனால் மிதவாத அரசியல் அப்படியல்ல. எதிரியின் இருப்பை ...
Read More »ஒரு புதிய யாப்புக்கான வாய்ப்புக்கள்?
ஒரு புதிய யாப்பை உருவாக்கப் போவதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு 20 ஆவது திருத்தத்தை கொண்டு வர முற்பட்ட வேளை அதற்கு சிறிய பௌத்த மகா சங்கங்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இரண்டு பலவீனமான சிறிய பௌத்த மகா சங்கங்களின் நாயக்கர்கள் யாப்பு திருத்தத்திற்கு பதிலாக ஒரு புதிய யாப்பை கொண்டு வரலாம் என்று கேட்டிருந்தார்கள். இதே கருத்தையே கத்தோலிக்க ஆயர்களின் சம்மேளனமும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இவ்வாறான ஒரு பின்னணியில் ராஜபக்சக்கள் தாங்கள் ஒரு புதிய யாப்பு கொண்டு வருவோம் ...
Read More »மாகாண சபைகளுக்கான தேர்தலும் ”கொரோனா இராஜதந்திரமும்”
புதிய அரசியலமைப்பில் மாகாண சபைகள் உருவாக்கத்தின் மூலாதாரமான 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நீக்கப்பட வேண்டும், மாகாணசபைகள் ஒழிக்கப்பட வேண்டும்,மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படக்கூடாது என அரசின் பங்காளிகளும் முக்கிய அமைச்சர்களும் போர்க் கொடிதூக்கியுள்ள நிலையில் அதற்கான நகர்வுகளையே மேற்கொண்டு வந்த கோத்தபாய ராஜபக்ச அரசு ,திடீரென 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்த முயற்சிப்பதன் பின்னணி என்ன? மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி, அதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ...
Read More »ஜெனிவாவா? சர்வதேச நீதிமன்றமா?
ஆங்கிலத்தில் “ஸ்குயர் வண்” என்றொரு சொற்பதம் உண்டு. அதாவது, ஏதாவதொன்றில் முன்னேற முடியாது மீண்டும் தொடங்கிய இடத்துக்கு அல்லது முன்னைய இடத்துக்குச் செல்வதென்பது இதன் அர்த்தம். இலங்கைத் தமிழர் அரசியலில் இப்பதம் எப்போதும் சாகாவரம் பெற்றது. மீண்டும் ஜெனிவாக் கூட்டத்தொடர் பற்றியே தமிழரின் அரசியல் கட்சிகளும் அவர்களின் தலைவர்களும் பேச ஆரம்பித்துள்ளனர். இதற்காக ஒற்றுமை அல்லது இணக்கம் என்பது தேடப்படுகிறது. இலங்கை நாடாளுமன்ற அரசியலில் உதயமான முதலாவது தமிழர் அரசியல் கட்சி அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ். அதன் உருவாக்கத் தலைவர் (காலஞ்சென்ற) ஜி.ஜி. ...
Read More »அற்பாயுளில் உதிர்ந்த மலர்
நான் அவுஸ்திரேலியா மெல்பனில் வசிக்கும் புறநகரமான மோர்வெல்லிலிருந்து சுமார் 65 கிலோ மீற்றர் தொலைவில் இருக்கும் மற்றும் ஒரு புறநகரமான சேல் என்ற ஊருக்கு கனத்த மனதுடன் சென்றுகொண்டிருக்கின்றேன். அந்தப்பாதையால் அதற்கு முன்னர் பலதடவைகள் அவுஸ்திரேலியாவின் மாநிலத் தலைநகரம் கன்பராவுக்கு சென்றிருந்தபோது இருந்த மனநிலையில் கடந்த செவ்வாயன்று மேற்கொண்ட அந்தப்பயணம் அமைந்திருக்கவில்லை. இந்த 2020 ஆம் ஆண்டு பிறந்தது முதல் எனக்குத் தெரிந்த சில கலை, இலக்கிய ஆளுமைகள் மறைந்ததையடுத்து அஞ்சலிக்குறிப்புகள் எழுதியிருக்கும் நான், எதிர்பாராதவகையில் எனக்கு என்றைக்குமே அறிமுகமில்லாத ஒரு தமிழ் இளைஞன் குறித்த அஞ்சலிக்குறிப்புகளை எழுதநேர்ந்துவிட்டதும் விதிப்பயனா? அல்லது உலகெங்கும் அகதிகளாக அலைந்துழலும் மனித ...
Read More »இருமுனைப் போருக்கு தயாராகும் சீன – பாகிஸ்தான் கூட்டணி
சீன-பாகிஸ்தான் உறவை, இரு நாட்டு தலைவர்களும் வழக்கமாக “இமயத்தை விட உயரமானது, கடலை விட ஆழமானது“ என்று வர்ணிப்பார்கள். தற்போது, சீன-பாகிஸ்தான் உறவுகள் வளரும் வேகத்தைப் பார்த்தால், அவை, மேலும் புதிய இமய உச்சியையும், கடல் ஆழத்தையும் எட்டிவிடும் சூழ்நிலையை நெருங்குவது தெரிகிறது. சீன அதிபர் ஷீ ஜின்பிங் 2013ல், சீனாவை ஆசிய, ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளுடன் இணைக்கும் “21ம் நூற்றாண்டின் சில்க் ரோடு” என்று கூறப்படும் பல்முனை கட்டமைப்பு திட்டத்தை துவக்கிய பின்பு, அதன் வெற்றிக்கு பாகிஸ்தான் இன்றியமையாத அங்கமாக மாறியுள்ளது. ஆகவே, ...
Read More »ஜெனீவா குறித்து தமிழ்க் கட்சிகளிடையே இணக்கப்பாடு வருமா?
கொரோனா அச்சத்துக்கு மத்தியிலும் மார்ச் மாதம் நடைபெறப்போகும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடர் குறித்து இராஜதந்திரிகள், அரசியல்வாதிகள், அரசியல் செயற்பாட்டாளர்களின் கவனம் திரும்பியிருக்கின்றது. பிரதான தமிழ்க் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சி ஒன்று திரைமறைவில் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதும் இதற்குக் காரணம். இதன் ஓரு அங்கமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தயாரிக்கப்பட்ட ஆவணம் ஒன்று அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன் ...
Read More »