சிறப்பு செய்திகள்

நினைவேந்தலின் பின்னரான சேறு பூசல்கள் யாருக்காக ?

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது தமிழின விடிவுக்காய் ஆரம்ப காலம் முதல் தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் முன்னின்று உழைத்த பல களம் கண்ட மூத்த போராளி காக்கா அவர்களை பல்கலைக்கழக மாணவர்கள் புறந்தள்ளி ஒதுக்கி விட்டதாக பொய்ப்பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.ஆனால் இறுதி வரை அனைத்து ஏற்பாடுகளையும் மாணவர்களை வழிப்படுத்தியும் செயற்பட்டவர் காக்காவேயென முக்கிய செயற்பாட்டாளர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். ஏற்பாடுகள் தொடர்பில் நடைபெற்ற பகிரங்கப்படுத்தப்படாத கூட்டங்களில் மாணவர்களையும் வடமாகாணசபையினையும் காக்கா அண்ணரே தொடர்புபடுத்தியதாக தெரிவித்த அவர் முதலமைச்சர் காக்காவையும் கூட்டங்களிற்க அழைத்துவர வலியுறுத்தியதை மூத்த ஊடகவியலாளர் ...

Read More »

சரணடைந்தால் விடுவிப்போம் என பசப்பு வார்த்தைகள் கூறி சதி செய்தே எமது மக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்!

எமது மக்கள் தற்செயலாகச் சாகவில்லை. கொடூரமாகக் கொலை செய்யப்பட்டவர்கள். ஒரு இடத்திற்குக் கொண்டுவரப்பட்டு, சரணடைந்தால் விடுவிப்போம் என்று பல பசப்பு வார்த்தைகள் கூறி எம் மக்களைச் சதி செய்து கொன்ற நிகழ்வை நாம் நினைவில் ஏந்தாது எப்படி இருப்பது? எனக் கேள்வி எழுப்பியிருக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஷ்வரன் போரில் இறந்தவர்களை நினைவு கூருவது, அவர் சாந்திக்காகப் பிரார்த்தனை செய்வதென்பதெல்லாம் சர்வதேச சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மனித உரிமைகளின் அலகுகள். ஆகவே நினைவேந்தலின் முக்கியத்துவத்தை தென்னிலங்கையில் உள்ளவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் வாராந்தோறும் ...

Read More »

முள்ளிவாய்க்கால்: தொடரும் தீராத சோகம்!-செல்வரட்னம் சிறிதரன்

‘உயிர் போய்விடுமே எண்டு பயந்துதான் நாங்கள் ஓடினோம். ஆனால் சாவை நோக்கித்தான் அந்த ஓட்டம் இருந்தது என்றது அந்த நேரம் எங்களில் பலருக்குத் தெரிந்திருக்கவில்லை’ என்று முள்ளிவாய்க்காலை நோக்கிய மரண ஓட்டத்தைப் பற்றி மகாலிங்கம் சிவநேசன் கூறுகின்றார்.  வகைதொகையின்றி பொதுமக்கள் கொன்றொழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் இருந்து தெய்வாதீனமாக உயிர்தப்பி இருப்பவர்களில் சிவநேசனும் ஒருவர். அவர் தனது மனைவியையும் ஒரு குழந்தையையும் ஒரு எறிகணை தாக்குதலில் பறிகொடுத்திருக்கின்றார். அந்த சம்பவத்தில் அவரும் படுகாயமடைந்தார். சிறிவந்த எறிகணையின் துண்டு ஒன்று வலது தொடையில் பாய்ந்து எலும்பை முறித்து, அந்தக் ...

Read More »

கரும்புள்ளித் தடம்! – பி.மாணிக்கவாசகம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஒரு விவகாரமாகவே மாறியிருப்பது வருந்தத் தக்கது. தமிழ் இனத்தின் அரசியல் உரிமைப் போராட்ட வரலாற்றில் முள்ளிவாய்க்கால் அவலம் என்பது, மிகமோசமான துன்பியல் சம்பவமாகப் பதிவாகியிருக்கின்றது. பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட அந்தத் துன்பியல் நிகழ்வை நினைவுகூர்வதில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளும் ஏட்டிக்குப் போட்டியான நிலைப்பாடுகளும்கூட முள்ளிவாய்க்கால் சோக நிகழ்வின் நினைவுகூரல் வரலாற்றில் ஒரு கரும் புள்ளியாக இடம் பெற்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.  யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில், முல்லைத்தீவு மாவட்டத்தின் குறுகியதொரு நிலப்பரப்பில் பொதுமக்களையும் விடுதலைப்புலிகளையும் கொண்டு ஒதுக்கி, ஒடுக்கிச் சுற்றி வளைத்து, அவர்கள் மீது ...

Read More »

குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன?

கடத்தப்பட்டு  தாக்கப்பட்ட  ‘த நேசன் நாழிதழின் முன்னாள் துணை ஆசிரியர் கீத் நொயர் வழக்கு மற்றும்  ‘த சண்டே லீடர்  வாரஇதழின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை வழக்கு விசாரணைகள் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் துறையால் கல்கிசை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட முக்கிய சாட்சியமானது, ஆட்சி மாற்றம் இடம்பெறுவதற்கு முன்னர் சேகரிக்கப்பட்டது என முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார். கடந்த வாரம் டெய்லி மிரர் பத்திரிகைக்கு நேர்காணல் ஒன்றை வழங்கிய போதே கோத்தபாய ராஜபக்ச இவ்வாறு தெரிவித்தார். தமது ஆட்சியின் போது இவ்விரு ...

Read More »

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: குறுகிய அரசியலுக்கு அப்பாலான கணம்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வை, யார் ஒழுங்குபடுத்துவது என்பது தொடர்பில், கடந்த ஒரு மாத காலமாக நீடித்து வந்த சிக்கலுக்குத் தற்காலிகத் தீர்வொன்று காணப்பட்டுள்ளது. அதன்பிரகாரம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், நினைவேந்தல் நிகழ்வுகளை நேரடியாக ஒழுங்குபடுத்தவுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்கள், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மத்தியஸ்தம் வகிக்க, முதலமைச்சருக்கும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் கடந்த திங்கட்கிழமை மாலை நடைபெற்ற சந்திப்பிலேயே இந்த முடிவு ...

Read More »

அரசியல் தீர்வை வென்றெடுக்க ஒன்றுபட்ட அழுத்தம் தேவை!

உள்ளூர் மோதல்களால் பாதிப்புற்ற நாடொன்றின் மேம்பாட்டுக்கு, நல்லிணக்க முயற்சிகளும் அதனோடிணைந்த அபிவிருத்தியும் இன்றியமையாததாகும். இவ்வகையில், இலங்கைத் தேசத்தில் ஏற்பட்ட உள்ளக மோதல்கள், வெறுமனே பௌதீகவள அழிவுகள் என்பதற்கப்பால், உயிர் உள அழிவுகளையும் அதிகமாகவே ஏற்படுத்தியுள்ளன என்பதைக் கடந்து காலச் சம்பவங்கள் புடம்போட்டுக்காட்டுகின்றன. இந்நிலையில்,  பௌதீகவள  அபிவிருத்திகள் என்பது, அரசியல் சார்ந்ததாகவும் நிதி சார்ந்த விடயங்களாகவே  அணுகப்பட வேண்டியுள்ளது. ஆனால், உயிர் ரீதியானதும் உள ரீதியானதுமான அழிவுகளை அல்லது பாதிப்புகளை, ஆத்மார்த்தமாக அணுக வேண்டிய தேவைப்பாடு, இங்கு நிறையவே உள்ளது. யுத்தம் நிறைவுக்கு வந்து, ஒன்பது ...

Read More »

போர் நினைவுகூரலை ஏற்பாடு செய்வதற்கான அருகதை!-பூபாலரட்ணம் சீவகன்

இலங்கைப் போரில் பலியானவர்களை நினைவுகூருவதற்கான காலப்பகுதி நெருங்குகின்றது. தமது உறவினர்களை, நண்பர்களை, முன்னாள் போராளிகளை நினைவுகூருவதற்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் இந்தக் காலப் பகுதியை பயன்படுத்துகிறார்கள். இறந்தவர்களை, அதுவும் ஒரு குறிப்பிட்ட பெரும் அனர்த்தத்தில் இறந்தவர்களை நினைவுகூருதல் பலவகைகளில் பயந்தரக்கூடிய ஒன்றுதான். முக்கியமாக தமது உறவுகளை இழந்தவர்களுக்கு மன ஆறுதலுக்கு இது பெரிதும் உதவும். அவர்கள் தமது மனவடுக்களை முடிந்தவரை ஆற்றிக்கொள்ள நீத்தாரை நினைவூரல் உதவும். இந்த நினைவுகூரலை முன்பு அரசாங்கத்தரப்பு எதிர்த்து வந்தது. ஆனால், ஒப்பீட்டளவில் அது இப்போது குறைந்துவிட்டது. ஆனால், ...

Read More »

நினைவு கூர்தல்: யாரை யாரால் யாருக்காக?

புனர்வாழ்வின் பின் விடுவிக்கப்பட்ட ஒரு மூத்த புலிகள் இயக்க உறுப்பினர் சொன்னார் ;நினைவு கூர்தல் தொடர்பாக நடக்கும் இழுபறிகளைப் பார்க்கும் போது முன்பு சிரித்திரன் சஞ்சிகையில் வந்த ஒரு கேலிச்சித்திரம் ஞாபகத்திற்கு வருகிறது என்று. அந்த கேலிச் சித்திரத்தில் ஒரு கூட்டம் எதற்காகவோ ஆளுக்காள் பிச்சுப்பிடுங்கிக் கொண்டு நிற்பார்கள். ஒரு பிச்சைக்காரர் தூரத்திலிருந்து அதைப் பார்த்துக் கொண்டிருப்பார். அவரிடம் ஒருவர் கேட்பார் அவர்கள் எதற்காகச் சண்டை போடுகிறார்கள் என்று. அதற்கவர் சொல்வார் எங்களுக்கு யார் தலைமை தாங்குவது என்பதற்காக அவர்கள் வாக்குவாதப்படுகிறார்கள் என்று. இக்கேலிச்சித்திரத்தைச் ...

Read More »

விக்கினேஸ்வரன் என்ன செய்யப் போகின்றார்?

மாகாண சபைத் தேர்தல்களை அரசாங்கம் இந்த வருடம் நடாத்துமோ என்னவோ தமிழ் அரசியலில் அதற்கான பரபரப்பு ஆரம்பித்துவிட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் எடுக்கும் சக்திகளாக உள்ள சம்பந்தனோ, சுமந்திரனோ புலிகளை ஏற்றவர்கள் அல்லர். புலிகள் அழிக்கப்பட்ட போது சுமந்திரன் அதனை இயற்கை நீதி என்றார். இன்று தேர்தல் பயத்தில் தமிழரசுக்கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் புலிகளைத் தலையில் தூக்கத் தொடங்கியுள்ளனர். வடமராட்சியில் இடம்பெற்ற மே தினத்தில் புலிகளின் எழுச்சிப்பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. முக்கியஸ்தர்கள் பலர் புலிகளின் சிவப்பு, மஞ்சள் சால்வையை அணிந்திருந்தனர். எல்லாவற்றிற்கும் விக்கினேஸ்வரன் ...

Read More »