சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் வடக்கு கிழக்கில் நினைவு கூறப்படுகின்றது. எங்களுக்கு என தீர்வு ஒன்று கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாங்கள் ஒவ்வொரு வருடமும் போராட்டங்களையும், கண்டன பேரணியையும் மேற்கொண்டு வருகின்றோம். ஆனால் இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேசம் இது வரை எங்களுக்கு ஒரு தீர்வையும் பெற்றுத் தரவில்லை என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் மனுவல் உதையச்சந்திரா தெரிவித்தார். இன்று சனிக்கிழமை காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். ...
Read More »செய்திமுரசு
தமிழர் தேசமும் ஒன்றுபட்டே நிற்கின்றது – கஜேந்திரகுமார்
ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் தங்களது கட்சிக்கு நாட்டு மக்களின் ஆணை வழங்கியிருப்பதாகக் குறிப்பிட்டார். அவரது கட்சிக்கு மக்கள் ஆணை கிடைத்திருக்கிறது என்பது சரியாக இருந்தாலும், இந்த ஆணை வடக்கு – கிழக்கிலிருந்தும் கிடைத்திருக்கிறது என்று சேர்த்துக் கூறுவது சரியானதல்ல. இவ்வாறு சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி கோத்தாபாய இராஜபக்ச ஆற்றிய உரைக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழங்கிய பதிலுரையில் குறிப்பிட்டார். அவரது உரையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: தமிழ் மக்களின் உரிமை அங்கீகரிக்கக்கோரியே வடக்கு கிழக்கில் மக்கள் ஏகோபித்த ஆணை ...
Read More »யாழில் வாள்வெட்டு; ஒருவர் கைது
யாழ். கொழும்புத்துறை பகுதியில் நேற்று (20) மதியம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை யாழ்ப்பாணம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்புத்துறை பகுதியில் நேற்று இனந்தெரியாத நபர்களால் ஒருவர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது. இதில் படுகாயமடைந்த இளைஞன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் ஒருவர் யாழ்ப்பாணம் ...
Read More »ஆட்சி அதிகாரத்தை தங்கையிடம் ஒப்படைக்க வட கொரியா அதிபர் முடிவு என தகவல்
வட கொரியா அதிபர் கிம் ஜாங்க் உன் ஆட்சி அதிகாரத்தை தனது தங்கையிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிழக்காசிய நாடான வட கொரியாவின் தலைவர், கிம் ஜாங்க் உன், (வயது 38) உடல் நிலை குறித்தும் அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன் பல்வேறு யூகங்களில் செய்திகள் வெளியான நிலையில் கடந்த மே மாதம் தலைநகர் பியோங்யாங் நகரில் உள்ள சன்ச்சூன் என்ற இடத்தில் பிரம்மாணட உர தொழிற்சாலை திறப்பு விழாவில் கிம் ஜாங் உன், ...
Read More »அன்றாட வாழ்வை அடியோடு மாற்றிய கொரோனா
கொரோனாவுக்கு முந்தைய வாழ்க்கை, கொரோனாவுக்கு பிந்தைய வாழ்க்கை என்று இன்றைய தினம் இந்த கொரோனா மனித வாழ்க்கையை அடியோடு புரட்டிப்போட்டிருப்பது ஆய்வில் அம்பலத்துக்கு வந்துள்ளது. மனித குலத்தில் இந்த தொற்று ஒரு அசாத்தியமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா- இந்த நூற்றாண்டில் இதுவரையில் பெரும்பாலான மக்களால் அதிகமாக பயன்படுத்தப்படுகிற ஒரு வார்த்தையாக மாறி விட்டிருக்கிறது. அந்த அளவுக்கு மனித குலத்தில் இந்த தொற்று ஒரு அசாத்தியமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கொ.மு., கொ.பி., என்று சொல்லத்தக்க விதத்தில் கொரோனாவுக்கு முந்தைய வாழ்க்கை, கொரோனாவுக்கு பிந்தைய ...
Read More »தேர்தல் பிரசாரத்தில் ‘சித்தி’ என்ற தமிழ் வார்த்தையை பயன்படுத்திய கமலா ஹாரிஸ்
கமலா ஹாரிஸ் தன் தேர்தல் பிரசாரத்தின் பேச்சுக்கிடையில், குடும்ப உறவுகள் குறித்துப் பேசிய போது, ‘சித்தி’ என்று தமிழில் குறிப்பிட்டார். கமலா ஹாரிஸ் தனது உரையின் போது சென்னையில் பிறந்து வளர்ந்த தனது தாய் குறித்து மிகவும் நெகிழ்ச்சியாக பேசினார். இதுபற்றி அவர் கூறுகையில், “இந்த நேரத்தில் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இருந்து அமெரிக்கா வந்த எனது தாய் ஷியாமலா குறித்து நினைவு கூற வேண்டும். தனது 19 வயதில் மருத்துவப் படிப்புக்காக அமெரிக்கா வந்தவர் எனது தாய் ஷியாமலா. அவரின் தோள்களில்தான் நான் ...
Read More »கோண்டாவிலை நேற்றிரவு சுற்றிவளைத்த இராணுவம்
யாழ்ப்பாணத்தில் கோண்டாவில் பகுதியில் நேற்றிரவு இராணுவத்தினர் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கோண்டாவில் மேற்கு பகுதியில் இராணுவத்தினர் ஏராளமானவர்கள் குவிக்கப்பட்டு திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து வீதிகளிலும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன் இராணுவத்தினரின் மோட்டார் சைக்கிள் பிரிவினர் மற்றும் ஏராளமான இராணுவத்தினர் இனைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
Read More »பெய்ரூட் வெடிவிபத்து: கற்பிதங்கள், உண்மைகள் மற்றும் பாடங்கள்
தொலைதூரத்திலிருந்து கேட்ட ஒரு பேரொலியிலிருந்துதான் எல்லாமே தொடங்கியது. லெபனானைச் சேர்ந்த பலரையும் போல எனது முதல் உள்ளுணர்வால் வானத்தை நோக்கி அண்ணாந்து பார்த்தேன். மருந்துக் கடையிலிருந்து வெளிவந்த நான் மேகங்களுக்கிடையில் உன்னிப்பாகக் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு இஸ்ரேலிய விமானத்தைப் பார்க்கப்போகிறேன் என்றே உறுதியாக நம்பினேன். இஸ்ரேலிய ஜெட் விமானங்களின் சத்தம் எனக்கு அத்துபடி. அச்சுறுத்தும் சத்தத்துடன் வரும் அந்த விமானங்களின் ஒலி காதைக் கிழிக்கும் வகையில் அதிகரித்துப் பின்னர் சன்னமாகி மறைந்துவிடும். ஒவ்வொரு வருடமும் லெபனான் வான் எல்லையில் 1,000 தடவைக்கும் அதிகமாக அத்துமீறி நுழையும் ...
Read More »கொரோனா தடுப்பூசி டிசம்பர் மாத இறுதியில் விற்பனைக்கு வரும் – சீனா
கொரோனா தடுப்பூசி இந்த ஆண்டு டிசம்பா் மாதத்தில் விற்பனைக்கு வரலாம் என்று சீனாவின் ‘சைனோ பார்ம்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகில் 213க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மருத்துவத்துறையினர் தீவிரமாக போராடி வருகின்றனர். பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆய்வாளர்கள் கொரோனாவிற்கான தடுப்பூசியை கண்டு பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். கொரோனாவுக்கான ...
Read More »ஜனநாயாக விழுமியத்தை பேணுவதற்க்கான கடப்பாட்டை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும்!
புதிதாக தெரிவு செய்யப்பட்ட சபாநாயக்ருக்கு சம்பிரதாயபூர்வமான வாழ்த்து சொல்லும் நிகழ்வு முதல் அமர்வாக நடந்துகொண்டிருக்கிறது.அதன் போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் பேசியதன் சாரம் “ புதிதாக தெரிவு செய்யப்பட்ட சபாநாயகர் அவர்கட்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். முன்னெப்போதும் இல்லாதவாறு ஒருமுனைப்படுத்தப்பட்ட அங்கத்தவர்களை கொண்ட நாடாளுமன்றாக இந்த 9 வது நாடாளுமன்று விளங்குகிறது. இந்த ஒரு முனைப்படுத்தப்பட்ட நாடாளுமன்றில் மறுபக்கத்தில் மக்கள் பிரதிநிதிகளாக அமர்ந்திருக்கும் எமக்கு மக்கள் அளித்துள்ள ஜனநாயக ஆணைக்குரிய மதிப்பையும் கெளரவத்தையும் கொடுத்து எமது மக்களின் ஜனநாயக ...
Read More »