அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள முதலைகள் நிறைந்த காட்டிற்குள் சிக்கியுள்ள சட்டவிரோத குடியேற்றவாசிகளை மீட்கும் நடவடிக்கையில் அவுஸ்திரேலிய காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். முதலைகள் நிரம்பிய டையின்பொரஸ்ட் என்ற சதுப்புநிலக்காட்டிற்குள் அகதிகள் சிக்குண்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட குழுவினருடன் இணைந்து அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய முயன்ற 15 பேரை கைதுசெய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குயின்ஸ்லாந்தின் டெயின்டிரீ ஆற்றுபகுதியில் படகொன்று தடுமாறிக்கொண்டிருப்பதை பார்த்த உள்ளுர் மக்கள் அதிகாரிகளிற்கு தெரியப்படுத்தியுள்ளனர். படகு தரைதட்டியுள்ள பகுதி முதலைகள் நிறைந்தது என்பதால் அதில் உள்ளவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் தெரியப்படுத்தியுள்ளனர்
Read More »செய்திமுரசு
தமிழ் தேசத்தின் மீதான இனவழிப்பு தொடர்கின்றது!- பார்த்திபன்
முள்ளிவாய்க்காலுடன் தமிழ் மக்கள் மீதான தமிழ் தேசத்தின் மீதான இனவழிப்பு முடிவடையவில்லை. இன்றும் அது தொடர்கின்றது . ஆனால் அது வேறு வடிவில் தொடருகின்றது. என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் தெரிவித்துள்ளார், ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள கண்டன அறிக்கையிலையே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, இரத்தமின்றி சத்தமின்றி மதத்தின் பெயராலும் மகாவலி அதிகாரசபை என்ற அதிகாரத்தினாலும் மரவுரிமைச் சொத்துக்கள் என்ற அறிவிப்புக்கள் மூலமும் தமிழ் தேசித்தின் பாரம்பரிய நிலங்கள் விழுங்கப்படுகின்றன. பூர்விகமாக ...
Read More »தலைவர் பிரபாகரனின் உடலில் சீருடையை நீக்க உத்தரவிட்ட பொன்சேகா!
“விடுதலைப்புலிகளின் தலைவரின் உடலில் இருந்து சீருடையை அகற்றுமாறு சரத்பொன்சேகாவே உத்தரவிட்டார்” என ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி சகி கலகே சிங்கள பத்திரிகையொன்றிற்கு தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக சசிகலகே , “பிரபாகரனின் உடலில் சீருடையை விட்டுவைப்பதற்காக சரத்பொன்சேகா இராணுவ அதிகாரிகளை ஏசினார். பிரபாகரனின் உடல் முதலில் தொலைக்காட்சிகளில் வெளியானபோது அது சீருடையுடன் காணப்பட்டது. இதனை பார்த்த சரத்பொன்சேகா கடும் சீற்றமடைந்தார். அவர் சீருடைளை அகற்ற உத்தரவிட்டார். இதன் பின்னர் நான் பிரபாகரனின் உடலை முகாமிற்கு எடுத்து சென்று சீருடையை அகற்றிய பின்னர் மீண்டும் ...
Read More »கூட்டத்தில் கூட்டமைப்பு கலந்து கொள்வதனால் பாதிப்பு ஏற்படாதாம்! -சித்தார்த்தன்
ஜனாதிபதியின் செயலணிக் கூட்டத்தில் கூட்டமைப்பு கலந்து கொள்வதனால் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்விலோ அல்லது இதர விடயங்களிலோ எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான புளெட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதியின் செயலணிக் கூட்டத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளாது அந்தக் கூட்டத்தைப் புறக்கணிக்க வேண்டுமென வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்மந்தனிடம் கோரிக்கை மூலம் ...
Read More »பந்து இப்பொழுது சம்பந்தரின் பக்கத்திலா? நிலாந்தன்
யாழ்ப்பாணத்தில் மிகக்குறைந்தளவு விற்கப்படும் ஒரு பத்திரிகை மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாக சர்ச்சைகளை ஏற்படுத்தும் ஒரு பத்திரிகை அச்சர்ச்சைகளின் மூலமாகவே விற்பனைப் பரப்பைக் கூட்டிக்கொள்ளும். ஆனால் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகை இதுவரை பல சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது. ஆனால் அதன் விற்பனை மட்டம் இன்று வரையிலும் லாப இலக்கை எட்டவில்லை. மிக விசித்திரமான ஓர் ஊடகவியல் யதார்த்தம் இது. அப்பத்திரிகையின் ஆசிரியர் வித்தியாதரன் ;மின்னல் என்ற பெயரில் எழுதும் பத்திகளை பெரும்பாலான அரசியல்வாதிகள் அதிகாலையிலேயே வாசித்து விடுகிறார்கள். இப்பத்தியில்தான் கோத்தபாய ஜனாதிபதியாக வருவதை ...
Read More »அமெரிக்க தேசிய கொடிக்கு தவறான வண்ணம் கொடுத்த டிரம்ப்!
அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு சென்றிருந்த டிரம்ப், அங்கு குழந்தைகளுடன் தேசிய கொடி வரையும் போது தவறான வண்ணத்தை கொடுத்தது கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. அமெரிக்காவின் தேசிய கொடியில் 7 சிவப்பு கோடுகள், 6 வெள்ளை கோடுகள் என மொத்தம் 13 கோடுகள் இருக்கும். இந்த கோடுகள் அமெரிக்கா உருவான போது இருந்த 13 மகாணங்களை குறிக்கும். மேலும், இடது ஓரத்தில் நீல நிற கட்டத்துக்குள் 50 நட்சத்திரங்கள் இருக்கும். இது, தற்போது உள்ள 50 மாநிலங்களை குறிக்கும். இந்நிலையில், அமெரிக்க அதிபர் ...
Read More »ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை மந்திரி ஜுலி பிஷப் ராஜினாமா!
ஆஸ்திரேலியாவில் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியை தழுவிய ஜுலி பிஷப், வெளியுறவுத்துறை மந்திரி பதவியை இன்று ராஜினாமா செய்தார். ஆஸ்திரேலியாவில் சமீபகாலமாக அரசியல் நிலையற்றத்தன்மை நிலவி வருகிறது. ஆளும் லிபரல் கட்சியில் தொடர்ந்து உட்கட்சி பூசல் ஏற்பட்டு அடிக்கடி புதிய பிரதமர்கள் பதவி ஏற்று வருகின்றனர். லிபரல் கட்சியை சேர்ந்த மால்கோல்ம் டர்ன்புல் கடந்த 3 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்து வந்தார். உள்கட்சியில் இவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. அதில் அவர் வெற்றி பெற்று தனது ...
Read More »கிளிநொச்சி இளைஞர்களுக்கு ஒரு கோடி ரூபா!
கிளிநொச்சி மாவட்ட இளைஞர் யுவதிகளின் மேம்பாடு கருதி தனது அமைச்சின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து ஒரு கோடி ரூபாவினை வழங்குவதாக தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்து்ளளார். கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தில் கிளிநொச்சி மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இளைஞர் யுவதிகளை சந்திந்த போதே அவர் இவ்வாறு உறுதியளித்துள்ளார். தனது அமைச்சின் நிதி ஒதுக்கீடு மூலம் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் யுவதிகளின் மேம்பாட்டிற்காக ஒரு கோடி ரூபாவினை ஒதுக்கீடு செய்வதாகவும், இதற்கான திட்டமிடல்கள் மற்றும் ...
Read More »அன்பின் பேருரு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்!
இந்திய சுதந்திர தேவியின் சிலையை எத்தனையோ சிற்பிகள் வடித்தனர். அந்தச் சிலையின் கண்களைத் திறந்தவர் நேதாஜி. இந்தியா எப்படி விடுதலைப் பெறவேண்டும் என்ற தீர்க் கமானப் பார்வையுடன் தன் ஐசிஎஸ் பதவியைத் துறந்து, விடுதலைப் போராட்டத்துக்குள் குதித்தார். “வாள் கொண்டு போரிடுபவனுக்கு வாள் மூலம்தான் பதிலளிக்க வேண்டும், ரத்தம் கொடுங்கள், சுதந்திரம் தருகிறேன்” என்ற முழக்கத்துடன் ஆயுதப் புரட்சியைத் தேர்ந்தெடுத்தார். அரண்மனைப் போன்ற வீடும், வீடு நிறைய வேலையாட் களும் பாரம்பரிய செல்வாக்கும் நிரம்பிய காங்கிரஸ் வழக்கறிஞர் ஜானகிநாத் – பிரபாவதி தம்பதியின் 14 ...
Read More »இந்திய அணி நவம்பரில் ஆஸ்திரேலியா பயணம்
இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா செல்கிறது. இரு அணிகள் இடையே மூன்று 20 ஓவர் போட்டி, 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா செல்கிறது. ஜனவரி மாதம் வரை அந்நாட்டில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர், 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. நவம்பர் 21-ந் திகதி போட்டிகள் தொடங்குகிறது. ஜனவரி 18-ந் திகதியுடன் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் முடிகிறது. 20 ஓவர் போட்டிகள் முதலில் நடக்கிறது. நவம்பர் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal