செய்திமுரசு

சர்வதேச விமானங்களை ஈர்ப்பதற்கான வேலைத்திட்டம்!

மத்தள விமான நிலையத்தை சர்வதேச விமானங்கள் வருகை தரும் விமான நிலையமாக மேம்படுத்துவதற்காக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரஸ்ரீ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்காக குறுகிய மற்றும் நீண்டகால திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது. விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திர ஸ்ரீ தெரிவித்துள்ளார். இந்த வேலைத் திட்டத்திற்கு உரிய பிரிவினரின் ஒத்துழைப்பை பெறுவது தொடர்பில் சகல விமான நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அவர் கூறினார். சர்வதேச விமான நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை ...

Read More »

கொரோனா வைரஸ் – ஆயிரத்தை தாண்டிய பலி!

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,011 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரத்தில் முதன்முதலாக பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. உலகம் முழுவதும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 25-க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது. இந்த வைரஸ் வவ்வால்களை உணவாக உண்ணும் கட்டுவிரியன் பாம்புகள் மூலம் பரவியிருக்கலாம் என கருதப்பட்ட நிலையில் முதலில் எறும்பு தின்னியிடம் இருந்துதான் பரவியிருக்க வேண்டும் என தற்போது கண்டுபிடித்துள்ளனர். இதற்கிடையில், நேற்றுவரை ...

Read More »

சிறிலங்காவில் 172 பேருக்கு கொரோனா தொற்று தொடர்பான சோதனை!

சிறிலங்காவில் சீனப் பெண் மாத்திரம் கொரோன தொற்றுக்குள்ளனதாகவும், அவர் தற்போது பூரண குணமடைந்துள்ளதாகவும் தெரிவித்த தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதாத் சமரவீரா, இலங்கையில் கொரோனா தொற்று தொடர்பில் முன்னெடுக்கப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் கொழும்பு தொற்று நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சீனப் பெண் எப்போது வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்படுவார் என்ற உறுதியான திகதி இன்னும் தீர்மனிக்கப்படவில்லை. இந் நிலையில் நாடு முழுவதும் 172 பேர் கொரோனா தொற்றுக்கிலக்கான சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், அதன் ...

Read More »

சிறிலங்காவுக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கும் வட மாகாண ஆளுநருக்குமிடையில் முக்கிய சந்திப்பு!

சிறிலங்கா  அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்கும் வட மாகாண ஆளுநருக்குமிடையில் முக்கிய சந்திப்பு சிறிலங்காவுக்கான அவுஸ்திரேலிய  உயர்ஸ்தானிகரும் அவருடைய குழுவினரும் வட மாகாண ஆளுனர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸூடன் இன்று 10.02.2020 நண்பகல் ஆளுனர் இல்லத்தில் சந்தித்து உரையாடினார்கள். இச்சந்திப்பின் போது வடக்கில் மேம்படுத்தப்படவேண்டிய ஏற்றுமதித்துறை, சுற்றுலாத்துறை, விருந்தோம்பல் மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான கற்கைநெறிகள். தாதியர்களுக்கான சர்வதேச தரத்திலான கற்கைநெறி, என்பன தொடர்பில் பரஸ்பரம் கலந்துரையாடப்பட்டன அடுத்த 5 வருடத்திற்கான திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஆர்வத்தை அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ஆவலுடன் வெளிப்படுத்தினார். குறிப்பிட்ட துறைகளில் முன்னெடுக்ககூடிய திட்டங்கள் தொடர்பில் விரிவாக ...

Read More »

பகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கை – ஆளுநர் உறுதி

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்ற பகிடிவதை தொடர்பான அனைத்து தகவல்களும் சமர்ப்பிக்கப்படும் போது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். இதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் தெரிவித்ததாவது; யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே இடம்பெற்ற பகிடிவதை தொடர்பில் நாம் கவனமாகவும் நுணுக்கமாகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கின்றோம். எனக்குக் கிடைத்த அறிக்கையின் படி பல்கலைக்கழக நிர்வாகம் இந்த பகிடிவதையில் ஈடுபட்டோரின் விவரங்களை எடுத்துள்ளனர். பல்கலைக்கழக நிர்வாகத்தினரை நான் இன்று சந்திக்க இருக்கின்றேன். அத்தோடு அந்த மாணவர்களுக்கு ...

Read More »

காணாமல் ஆக்கப்பட்டவர்களை மறக்க முயற்சிக்கும் ஒருதீவு?

காணாமல் ஆக்கப்பட்டவர்களை நிலத்தில் தோண்டித்தான் எடுக்கவேண்டும் என்று விமல் வீரவன்ச கூறியிருக்கிறார். இதை அவர் மட்டும்தான் கூறுகிறார் என்று இல்லை. ஏற்கனவே ஜனாதிபதி கோட்டாபய அதை கூறிவிட்டார். அவருக்கு முன் ரணில் விக்கிரமசிங்க அதைக் கூறிவிட்டார். சிங்களத் தலைவர்கள் மட்டுமல்ல சம்பந்தரும் அப்படித்தான் கூறுகிறார். ஆனால் அந்த உண்மையை கூறுவதற்கு அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளில் தான் வேறுபாடு உண்டு. 2016ஆம் ஆண்டு தைப்பொங்கல் தினத்தன்று அதை ரணில் விக்ரமசிங்க கூறினார். ஆனால் காணாமல் போனவர்களில் பலர் வெளிநாடு சென்று இருக்கலாம் என்று அவர் சொன்னார். ...

Read More »

தனிப்பட்ட நபர்கள் தலையிட வேண்டாம்!

அரசாங்கத்தின் செயற்பாடுகளில் பிரதமர் மற்றும் அமைச்சர்களின் தனிப்பட்ட செயலாளர்கள், மக்கள் தொடர்பு அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் தலையீடு செய்வதை நிறுத்துமாறு சிறிலங்கா  ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளரால் அனைத்து அமைச்சுகள் மற்றும் செயலகங்களுக்கு 07 ஆம் திகதியிடப்பட்ட சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறானவர்கள், கடிதம் அல்லது தொலை பேசி அழைப்பு உள்ளிட்ட எந்தவொரு வழிகளிலும் அரசாங்க செயற்பாடுகள் தொடர்பில் ஆணைகள் வழங்கக்கூடாது என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் சார்ப்பில் பிரதமரின் செயலாளர், அமைச்சர்களின் செயலாளர் மற்றும் இராஜாங்க அமைச்சுகளின் ...

Read More »

சீன அதிபர் ஜி ஜின்பிங் ரகசிய இடத்தில் தஞ்சம் – பொதுமக்கள் கடும் கோபம்

கொரோனா வைரசில் இருந்து தப்பிக்க சீன அதிபர் ஜி ஜின்பிங் பாதுகாப்பான இடத்தில் ரகசியமாக தஞ்சம் புகுந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் ரகசிய இடத்தில் தஞ்சம் புகுந்து இருப்பது தெரிய வந்துள்ளது. 3 வாரங்களுக்கு முன்பு அவர் பீஜிங்கில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “ஒவ்வொரு சீனரும் இந்த நாட்டில் வாழ்வதற்காக பெருமைபடும் வகையில் இந்த ஆண்டு முன்னேற்றம் இருக்கும். நமது நாட்டின் ...

Read More »

கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்தால் 1 கோடி ரூபாய் பரிசு- ஜாக்கிசான்

கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு அளிப்பேன் என்று பிரபல ஹாலிவுட் நட்சத்திரமான ஜாக்கிசான் அறிவித்துள்ளார். சீனாவில் வுகான் நகரத்தில் உருவான கொரோனா வைரஸ் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. இந்த கொடூர கொரோனா வைரசால் இதுவரை 908 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உலக அளவில் 37000-க்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கவில்லை. வைரஸ் பரவாமல் தடுக்க சீன அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ...

Read More »

கொரோனா வைரஸ் 9 நாட்கள் உயிரோடு இருக்கும்!- ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

சீனாவில் சுமார் 800-க்கும் மேற்பட்டோரை பலி வாங்கி இருக்கும் கொரோனா வைரஸ் 9 நாட்கள் வரை உயிரோடு இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து உள்ளனர். ஹாஸ்பிட்டல் இன் பெக்சன் இதழில் கொரோனா வைரஸ் பற்றிய ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் ஆய்வு மைய பேராசிரியர் கண்டர்கம்ப் கூறியிருப்பதாவது:- கொரோனா வைரஸ் சராசரியாக 4 முதல் 5 நாட்கள் வரை உயிரோடு இருக்கும். குறைந்த வெப்ப நிலை, காற்றில் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதம் ஆகியவை கொரோனா வைரசின் வாழ்நாளை அதிகரிக்கும். காற்றிலோ, தரையிலோ கூட 9 ...

Read More »