குமரன்

சமூக விழிப்புணர்வு படத்திற்கு சான்றிதழ் வழங்க தணிக்கைக் குழு மறுப்பு!

சமூக விழிப்புணர்வு படத்திற்கு சான்றிதழ் தர தணிக்கைக் குழு மறுப்பு தெரிவிப்பதாக படத்தின் இயக்குநர் மனவேதனையுடன் தனது வருத்தத்தை தெரிவித்திருக்கிறார். எக்ஸட்ரா எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் வி. மதியழகன், ஆர்.ரம்யா தயாரித்திருக்கும் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ படத்திற்கு சென்ஸார் மறுக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் ‘திலகர்’ படத்தில் நடித்த துருவா ஹீரோவாகவும், ஐஸ்வர்யா தத்தா, அஞ்சனா உள்ளிட்ட இரண்டு பேர் நாயகிகளாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜேடி சக்ரவர்த்தி, சரண்யா பொன்வண்ணன், ராதாரவி, நாகிநேடு, மனோபாலா, அருள்தாஸ், ‘மைம்’ கோபி, ‘சதுரங்க வேட்டை’ புகழ் வளவன், ‘நான் மகான் அல்ல’ ...

Read More »

காற்று – மின்சாரத்தில் உணவு தயாரிப்பு!

சர்வதேச அளவில் உணவு தட்டுப்பாடு அபாயம் உள்ள நிலையில் காற்று மற்றும் மின்சாரம் மூலம் உணவு பொருள் தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளனர். சர்வதேச அளவில் உணவு தட்டுப்பாடு அபாயம் உள்ள நிலையில் காற்று மற்றும் மின்சாரம் மூலம் உணவு பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. பின்லாந்தில் உள்ள வி.டி.டி. தொழில் நுட்ப ஆராய்ச்சி மையம், லபீர்னந்தா தொழில் நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து இச்சாதனை புரிந்துள்ளனர். காற்றில் இருந்து கார்பன்டை ஆக்சைடை பிரித்து எடுத்து அதிலிருந்து புரோடீன் பவுடர் தயாரித்துள்ளனர். அதை மனிதர்கள் மற்றும் விலங்குகள் ...

Read More »

சுமந்திரன் மீதான கொலை வழக்கு! சிறிலங்காவின் புலனாய்வு அதிகாரிகள் அவுஸ்ரேலியா விரைவு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மீதான கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியை நாடுகடத்த சிறிலங்காவில் இருந்து புலனாய்வு அதிகாரிகள் மூவர் அடங்கிய குழுவினர் அவுஸ்ரேலியாவிற்கு பயணமாகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய இரு தடவைகள் முயன்றதோடு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் குழுவுடன் தொடர்புகளைப் பேனியத்துடன் உயிராபத்தை ஏற்படுத்தும் வெடிபொருட்களையும் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கிளிநொச்சி நீதிமன்றில் கடந்த ஜனவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் முக்கிய சூத்திரதாரி எனக் கருதப்படுபவர் அவுஸ்திரேலியாவில் வாழ்வதாக கண்டறியப்பட்டு ...

Read More »

மூன்று வித நிறங்களில் மோட்டோ ஜி5எஸ் பிளஸ்!

மோட்டோரோலாவின் மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த ஸ்மார்ட்போன் மூன்று நிறங்களில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. மோட்டோரோலா மோட்டோ ஜி5எஸ் மற்றும் ஜி5எஸ் பிளஸ் விலை இணையத்தில் கசிந்தது. இதைத் தொடர்ந்து மோட்டோ ஜி5எஸ் பிளஸ் பிளாக், ரோஸ் கோல்டு மற்றும் சில்வர் என மூன்று நிறங்களில் வெளியாகும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. மூன்று மாடல்களின் புகைப்படங்களும் இணையத்தில் பதிவிடப்பட்டுள்ள நிலையில் இந்த ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே வெளியான தகவல்களுக்கு ஏற்ப வளைந்த டூயல் கேமரா அமைப்பு ...

Read More »

அவுஸ்ரேலியாவில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் சமகால அரசியல் கலந்துரையாடல்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணிலும் சிட்னியிலும் சமகால அரசியல் கலந்துரையாடல் நிகழ்வில் பங்குகொள்ளவுள்ளார். தற்போதைய சமகால அரசியல் தொடர்பிலும் எதிர்கால அரசியல் திட்டங்கள் தொடர்பிலும் அவர் கலந்துரையாடலை மேற்கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.  

Read More »

நீச்சல் உடைக்கு மாறிய கேத்தரின் தெரசா

பட உலகில் நுழைந்தபோது நான் கவர்ச்சி காட்ட மாட்டேன் என்று கூறிவந்த கேத்தரின் தெரசா தற்போது தனது கொள்கையை தளர்த்தி நீச்சல் உடையில் வரத் தொடங்கியிருக்கிறார். ‘மெட்ராஸ்’ படத்துக்குப் பிறகு ‘கடம்பன்’ படத்தில் கேத்தரின் தெரசா நடித்தார். தற்போது தமிழில் ‘கதாநாயகன்’ படத்தில் நடிக்கிறார். இது தவிர தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். பட உலகில் நுழைந்தபோது ‘நான் கவர்ச்சி காட்ட மாட்டேன். உடை அணிவதில் கட்டுப்பாட்டை மீற மாட்டேன்’ என்று கூறிய கேத்தரின் தெரசா இப்போது தெலுங்கு படங்களுக்காக தனது கொள்கையை தளர்த்தி ...

Read More »

அவுஸ்ரேலியா – மனஸ் தீவில் இடம்பெற்ற வேறுவேறு வன்முறைசம்பவங்களில் மூன்று அகதிகள் காயம்

மனஸ் தீவில் இடம்பெற்ற வன்முறைசம்பவங்களில் மூன்று அகதிகள் காயமடைந்துள்ளனர். வார இறுதியில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவுஸ்திரேலியாவினால் பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள  அகதிகளே இவ்வாறு தாக்குதலிற்கு உள்ளாகியுள்ளனர். மனஸ்தீவின் நகரப்பகுதியில் சூடானை சேர்ந்த அகதி தங்கியிருந்த பகுதிக்குள் நுழைந்த நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் அந்த அகதியின் காலில் கடும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற கொள்ளை சம்பவத்தின் போது ஈரானிய அகதியின் கையை நபர் ஒருவர்  வெட்டி காயப்படுத்தியுள்ளார். ஈரானிய அகதிக்கு ஏற்பட்டள்ள மோசமான காயங்களை காண்பிக்கும் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் விமானப்பயணிகள் மீதான சோதனைகள் தீவிரம்!

அவுஸ்ரேலியாவின் சிட்னியில் விமானங்களை தாக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி அம்பலமாகியுள்ளதை தொடர்ந்து விமானப்பயணிகளை சோதனையிடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக சிட்னி மற்றும் மெல்பேர்ன் விமானநிலையங்களில் பெரும் தாமதம் நிலவுவதுடன் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர் சிட்னி விமானநிலையத்தில் மிக நீண்ட வரிசையில் பயணிகள் பாதுகாப்பு சோதனைகளை முடித்துக்கொள்வதற்காக காத்திருக்கின்றனர். மெல்பேர்ன் விமான நிலையத்திலும் நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருக்கின்றனர்-மேலும் பாதுகாப்பு அதிகாரிகளின் அதிகளவு நடமாட்டத்தையும் காண முடிகின்றது. உள்ளுர் விமானசேவைகளை பயன்படுத்துபவர்களை இரண்டு மணித்தியாலம் முன்னதாக வருமாறும்  இதன் மூலம் தாமதங்களை தவிர்க்கலாம் எனவும்  அதிகாரிகள் ...

Read More »

மடக்கும் உடற்பயிற்சி கருவி

வெளியூர் பயணங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சி கருவி. உடற்பயிற்சியை முடித்துவிட்டு மடக்கி வைத்துக் கொள்ளலாம். எடை குறைவானது. உடற்பயிற்சியை தவறாமல் செய்பவர்களுக்கு பயன்படும். உடற்பயிற்சிக்குத் தோதான வகையில் பல இடங்களில் பொருத்திக் கொள்ளவும் முடியும்.

Read More »

80,000 ஆண்டு பழைய முதுமக்கள் தாழி… அவுஸ்ரேலியா கீழடியில் நடப்பது என்ன?

“கடக்… தடக்…டொம்… தம்…. பட்ட்…. டமார்…” இப்படி எந்த சத்தங்களும் அங்கு கேட்கவில்லை. மிக மெதுவாகவும், ஜாக்கிரதையாகவும் அந்த இடத்தைத் தோண்டிக்கொண்டிருந்தனர். ஓர் இனத்தின் மிகப் பெரிய வரலாற்றை ஆராய இருக்கிறோம் , அது மனித இனத்தின் பல கேள்விகளுக்கு விடையளிக்கலாம் என்ற ஆர்வம் இருந்தாலும், இது குறிப்பிட்ட இனத்தின் மண், அவர்களுக்கு எந்த சேதாரமும் இல்லாமல் பத்திரமாக இதைத் திருப்பிக் கொடுக்கவேண்டும் என்கிற பொறுப்பு அவர்களின் ஒவ்வொருவரின் உளிச் சத்தத்திலும் கேட்கவே செய்தது. சிறு, சிறு கற்களைக் கூட அந்த மிருதுவான ப்ரெஷ் கொண்டு சுத்தப்படுத்தினர். ...

Read More »