குமரன்

அன்றாட வாழ்வை அடியோடு மாற்றிய கொரோனா

கொரோனாவுக்கு முந்தைய வாழ்க்கை, கொரோனாவுக்கு பிந்தைய வாழ்க்கை என்று இன்றைய தினம் இந்த கொரோனா மனித வாழ்க்கையை அடியோடு புரட்டிப்போட்டிருப்பது ஆய்வில் அம்பலத்துக்கு வந்துள்ளது. மனித குலத்தில் இந்த தொற்று ஒரு அசாத்தியமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா- இந்த நூற்றாண்டில் இதுவரையில் பெரும்பாலான மக்களால் அதிகமாக பயன்படுத்தப்படுகிற ஒரு வார்த்தையாக மாறி விட்டிருக்கிறது. அந்த அளவுக்கு மனித குலத்தில் இந்த தொற்று ஒரு அசாத்தியமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கொ.மு., கொ.பி., என்று சொல்லத்தக்க விதத்தில் கொரோனாவுக்கு முந்தைய வாழ்க்கை, கொரோனாவுக்கு பிந்தைய ...

Read More »

தேர்தல் பிரசாரத்தில் ‘சித்தி’ என்ற தமிழ் வார்த்தையை பயன்படுத்திய கமலா ஹாரிஸ்

கமலா ஹாரிஸ் தன் தேர்தல் பிரசாரத்தின் பேச்சுக்கிடையில், குடும்ப உறவுகள் குறித்துப் பேசிய போது, ‘சித்தி’ என்று தமிழில் குறிப்பிட்டார். கமலா ஹாரிஸ் தனது உரையின் போது சென்னையில் பிறந்து வளர்ந்த தனது தாய் குறித்து மிகவும் நெகிழ்ச்சியாக பேசினார். இதுபற்றி அவர் கூறுகையில், “இந்த நேரத்தில் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இருந்து அமெரிக்கா வந்த எனது தாய் ஷியாமலா குறித்து நினைவு கூற வேண்டும். தனது 19 வயதில் மருத்துவப் படிப்புக்காக அமெரிக்கா வந்தவர் எனது தாய் ஷியாமலா. அவரின் தோள்களில்தான் நான் ...

Read More »

கோண்டாவிலை நேற்றிரவு சுற்றிவளைத்த இராணுவம்

யாழ்ப்பாணத்தில் கோண்டாவில் பகுதியில் நேற்றிரவு இராணுவத்தினர் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கோண்டாவில் மேற்கு பகுதியில் இராணுவத்தினர் ஏராளமானவர்கள் குவிக்கப்பட்டு திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து வீதிகளிலும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன் இராணுவத்தினரின் மோட்டார் சைக்கிள் பிரிவினர் மற்றும் ஏராளமான இராணுவத்தினர் இனைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Read More »

பெய்ரூட் வெடிவிபத்து: கற்பிதங்கள், உண்மைகள் மற்றும் பாடங்கள்

தொலைதூரத்திலிருந்து கேட்ட ஒரு பேரொலியிலிருந்துதான் எல்லாமே தொடங்கியது. லெபனானைச் சேர்ந்த பலரையும் போல எனது முதல் உள்ளுணர்வால் வானத்தை நோக்கி அண்ணாந்து பார்த்தேன். மருந்துக் கடையிலிருந்து வெளிவந்த நான் மேகங்களுக்கிடையில் உன்னிப்பாகக் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு இஸ்ரேலிய விமானத்தைப் பார்க்கப்போகிறேன் என்றே உறுதியாக நம்பினேன். இஸ்ரேலிய ஜெட் விமானங்களின் சத்தம் எனக்கு அத்துபடி. அச்சுறுத்தும் சத்தத்துடன் வரும் அந்த விமானங்களின் ஒலி காதைக் கிழிக்கும் வகையில் அதிகரித்துப் பின்னர் சன்னமாகி மறைந்துவிடும். ஒவ்வொரு வருடமும் லெபனான் வான் எல்லையில் 1,000 தடவைக்கும் அதிகமாக அத்துமீறி நுழையும் ...

Read More »

கொரோனா தடுப்பூசி டிசம்பர் மாத இறுதியில் விற்பனைக்கு வரும் – சீனா

கொரோனா தடுப்பூசி இந்த ஆண்டு டிசம்பா் மாதத்தில் விற்பனைக்கு வரலாம் என்று சீனாவின் ‘சைனோ பார்ம்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகில் 213க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மருத்துவத்துறையினர் தீவிரமாக போராடி வருகின்றனர். பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆய்வாளர்கள் கொரோனாவிற்கான தடுப்பூசியை கண்டு பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். கொரோனாவுக்கான ...

Read More »

ஜனநாயாக விழுமியத்தை பேணுவதற்க்கான கடப்பாட்டை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும்!

புதிதாக தெரிவு செய்யப்பட்ட சபாநாயக்ருக்கு சம்பிரதாயபூர்வமான வாழ்த்து சொல்லும் நிகழ்வு முதல் அமர்வாக நடந்துகொண்டிருக்கிறது.அதன் போது   கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் பேசியதன் சாரம் “ புதிதாக தெரிவு செய்யப்பட்ட சபாநாயகர் அவர்கட்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். முன்னெப்போதும் இல்லாதவாறு ஒருமுனைப்படுத்தப்பட்ட அங்கத்தவர்களை கொண்ட நாடாளுமன்றாக இந்த 9 வது நாடாளுமன்று விளங்குகிறது. இந்த ஒரு முனைப்படுத்தப்பட்ட நாடாளுமன்றில் மறுபக்கத்தில் மக்கள் பிரதிநிதிகளாக அமர்ந்திருக்கும் எமக்கு மக்கள் அளித்துள்ள ஜனநாயக ஆணைக்குரிய மதிப்பையும் கெளரவத்தையும் கொடுத்து எமது மக்களின் ஜனநாயக ...

Read More »

சபை நடவடிக்கை ஒத்திவைப்பு

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு  இன்று (20) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது. இதன்போது, சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவுசெய்யப்பட்டார். அவரது பெயரை  தினேஷ் குணவர்தன முன்மொழிந்தார். அதனை, எதிர்கட்சி சார்பில் ரஞ்சித் மத்தும பண்டார வழிமொழிந்த நிலையில், மஹிந்த யாப்பா அபேவர்தன போட்டியின்றி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டார். இதனையடுத்து, மஹிந்த யாப்பா அபேவர்தன, சாபாநாயகர் ஆசனத்துக்கு சென்று புதிய சபாநாயகராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். அத்துடள், புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ள சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அழைப்பு விடுத்தார். இதனையடுத்து, சத்திய ...

Read More »

அகதிகளின் உரிமைகளை மறுக்கும் ஆஸ்திரேலிய அரசு………!

ஆஸ்திரேலிய அரசினால் பப்பு நியூ கினியா மற்றும் நவுருத்தீவுக்கு அனுப்பப்பட்ட அகதிகளின் உரிமைகளைப் பாதுகாக்க ஆஸ்திரேலியா தொடர்ந்து மறுப்பதாக ஐ.நா. வுக்கு சமர்பித்த அறிக்கையில் ஆம்னெஸ்டி இண்டர்நேசனல் எனும் மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. ஐ.நா.வின் அனைத்துலக காலாந்தர மீளாய்வு (Universal Periodic Review) விரைவில் நடக்கவிருக்கும் நிலையில், மீளாய்வுக்காக அறிக்கை சமர்பித்துள்ள ஆமென்ஸ்டி அமைப்பு, ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியவர்களும் அகதிகளும் தொடர்ந்து மனித உரிமை மீறல்களுக்காக ஆளாவதாக கவலைக் கொண்டுள்ளது. பாதுகாப்புத் தேடி ஆஸ்திரேலியாவுக்கு வந்தவர்களை குறிப்பாக படகு வழியாக தஞ்சமடைந்தவர்களை ...

Read More »

நயன்தாரா பெயரில் பேய் படம் – விக்னேஷ் சிவன் கோபம்

பேய் படம் ஒன்றிற்கு நயன்தாரா கதாபாத்திரத்தின் பெயரை வைத்ததால் இயக்குனர் விக்னேஷ் சிவன் கோபம் அடைந்துள்ளாராம். அறிமுக இயக்குனர் அருள் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் காதம்பரி. கதாநாயகனாக அருள் மற்றும் கதாநாயகியாக காசிமா ரஃபி நடித்துள்ளார்கள். மேலும் அகிலா நாராயணன், சர்ஜுன், நிம்மி, பூஜிதா, சௌமியா, மகாராஜன் மற்றும் முருகானந்தம் ஆகியோர்களும் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க புதுமுகங்களை கொண்டு உருவாகி இருக்கும் படம் காதம்பரி. படத்தைப் பற்றி இயக்குனர் கூறியதாவது: இந்த படத்தின் தலைப்பை நயன்தாரா – விக்னேஷ் சிவன் கூட்டணியில் சில ...

Read More »

வடகொரியாவில் உணவு பற்றாக்குறை -வளர்ப்பு நாய்களை ஒப்படைக்க கிம் ஜாங் உன் உத்தரவு?

வடகொரியாவில் உணவு பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், வளர்ப்பு நாய்களை ஒப்படைக்கும்படி அதிபர் உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வடகொரியாவில் உள்ள 25.5 மில்லியன் மக்களில் 60 சதவீதம் பேர் உணவு பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர் என்று ஐ.நா சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. உணவு பற்றாக்குறை பிரச்சினை காரணமாக நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் மீது நாட்டு மக்களிடம் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. உணவுபற்றாக்குறை குறித்து வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் அந்நாட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் வடகொரியாவில் இறைச்சி பற்றாக்குறை காரணமாக ...

Read More »