குமரன்

தடுப்பூசி போட்டதன் விளைவாக அவுஸ்த்ரேலியாவில் முதல் மரணம்!

ஆஸ்திரேலியாவில் AstraZeneca தடுப்பூசி போட்டுக்கொண்ட 48 வயது பெண் ரத்த உறைவால் மரணித்துள்ளதாக கூறப்படுகிறது ஆஸ்திரேலியாவில் தடுப்பூசியால் ஏற்பட்டுள்ள விளைவினால் ஏற்ப்பட்ட முதல் மரணம் என பதியப்பட்டுள்ளது. அந்தப் பெண் ஆஸ்திரேலியாவில் AstraZeneca தடுப்பூசி போட்ட பின் ரத்த உறைவுப் பிரச்சினையை எதிர்கொண்ட 3வது நபர் எனவும் , ஏற்க்கனே இப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த  இருவரின் உடல்நலம் தேறிவருவதாகத் கூறப்படுகிறது. அவருக்கு ஏற்க்கனவே நீரிழிவு உள்ளிட்ட சில நோய்களும்  இருந்ததாகவும் அனால், ரத்த உறைவுக்கு அது காரணங்களாக அமையாது எனவே அது தடுப்பூசியினால் ஏற்பட்டது என்றே  ...

Read More »

நடிகர் விவேக் காலமானார்

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்புக்கு சிகிச்சை பெற்றுவந்த நடிகர் விவேக் காலமானார். தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த விவேக் (59), தமது காமெடி மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்துள்ளார். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் விவேக். இவர் தமது காமெடி மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்துள்ளார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். நடிகர் விவேக் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ...

Read More »

அமெரிக்காவில் 13 வயது சிறுவனை சுட்டுக்கொன்ற காவல் துறை

கடந்த 11-ந்திகதி டான்ட் என்ற கறுப்பின வாலிபர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் அமெரிக்காவில் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் சிறுவனை காவல் துறை சுட்டுக் கொல்லும் காணொளி காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் சிகாகோவில் 13 வயது சிறுவனை காவல் துறையினர்   சுட்டுக் கொன்றுள்ளனர். அந்த காணொளி 2 வாரம் கழித்து காவல் துறை வெளியிட்டுள்ளனர். அந்த காணொளி காரில் இருந்து இறங்கும் காவல் துறை அதிகாரி ஒருவர், ஆடம்டோலிடோ என்ற சிறுவனை மடக்கி கைகளை உயர்த்தச் சொல்கிறார். பின்னர் சிறுவனை ...

Read More »

விவேக்கிற்கு மாரடைப்பு – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வரும் விவேக், தமது காமெடி மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்துள்ளார். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விவேக். இவர் தமது காமெடி மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்துள்ளார். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் விவேக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சை பிரிவில் ...

Read More »

யாழில் துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்

சிறப்பு அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி படுகாயமடைந்த இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடமராட்சி கிழக்கு முள்ளி பகுதியில் இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காவல் துறையின்  கட்டுப்பாட்டை மீறி வாகனத்தில் பயணித்ததன் காரணமாக இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் துன்னாலையைச் சேர்ந்த இருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒருவரின் காலில் துப்பாக்கி ரவை உள்ளதால் அவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More »

குருந்தூர் மலையில் இந்துக்கள் வழிபட முழு உரித்தையும் பெற்றுக்கொடுப்போம் – சுமந்திரன்

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்புப் பகுதியில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீக வழிபாட்டுத்தலமான குருந்தூர்மலையில், இந்து மக்கள் வழிபடுவதற்கான முழு உரித்தையும் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். குருந்தூர் மலையில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் வழக்கொன்றினைத் தொடர்வது தொடர்பில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர் கடந்த 30.01.2021 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்தினைச் சந்தித்து கலந்துரையாடியதுடன் அன்று வழக்குத் தொடர்வதற்கான ஆவணங்கள் ...

Read More »

நீண்ட போரை முடிவுக்குக் கொண்டு வரும் நேரம்!

அமெரிக்காவின் நீண்ட போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நேரம் இது என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படை வீரர்களை திரும்பப் பெறும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ஜோ பைடன் நிர்வாகமும் இம்முடிவைத் தொடர்கிறது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் கூறும்போது, “ எங்கள் படை வீரர்கள் ஆப்கானிஸ்தானில் தொடர்வதை நாங்கள் விரும்பவில்லை. ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் நீண்ட காலப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நேரம் இது” என்று தெரிவித்துள்ளார். ...

Read More »

தமிழர் அரசியல் எதை நோக்கி?

திருவிழா முடிவுற்றதும் அடியார்கள் காலாற ஓய்வெடுப்பதற்கும், தமிழர் அரசியலுக்கும் ஏதாவது தொடர்பிருக்கின்றதா? நிச்சயம் இருக்கின்றது. ஜெனிவா திருவிழா முடிந்துவிட்டது. கடந்த சில மாதங்களாக தமிழர் அரசியலானது, களத்திலும் புலத்திலும் கடும் பரபரப்பாக இருந்தது. எந்தப் பக்கம் திரும்பினாலும் ஜெனிவா பற்றிய பேச்சுக்கள்தான். முதலில் பூச்சிய வரைபு சரியா – தவறா என்பதில் ஆரம்பித்த ஜெனிவா திருவிழா, இறுதியில் இந்தியா முதுகில் குத்திவிட்டது – தமிழர்கள் மீளவும் ஏமாற்றப்பட்டுவிட்டனர் – என்றவாறான விவாதங்களுடன் முற்றுப்பெற்றது. எப்போது மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் வாக்கெடுப்பில் வெற்றிபெற்றதோ, அப்போதே ...

Read More »

தடுப்பூசி போட்டாலும் கொரோனா பாதிப்பு வரும்… விவேக்

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் விவேக் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டார். தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. சுகாதாரத்துறை அதிகாரிகள் இதனை கட்டுப்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். பொது மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி மாநிலம் முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இன்று நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதன் பின் பேசிய அவர், ‘பொது மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி குறித்து எவ்வித ...

Read More »

4 காவல் துறையை கொன்ற இந்தியருக்கு 22 ஆண்டு சிறை

ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு காவல் துறை வாகனத்தின் மீது லாரியை மோதி விபத்து ஏற்படுத்திய சம்பவத்தில் காவல் துறை அதிகாரிகள் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மொஹிந்தர் சிங் (வயது 48).‌ இவர் போதை பழக்கத்துக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ந் திகதி விக்டோரியா மாகாணத்தின் தலைநகர் மெல்போர்னில் உள்ள நெடுஞ்சாலையில் மொஹிந்தர் சிங், தனது லாரியில் சென்று கொண்டிருந்தார். ...

Read More »