பெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகம்

பெண்களின் முகத்தின் குறிப்பறிந்து அவர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை நாம் அறிய முடியும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பார்கள். அதாவது நமது மனதின் நிலையை அப்படியே படம் பிடித்துக்காட்டும் கண்ணாடி தான் நமது முகம். ஒருவர் சந்தோஷமாக இருந்தால், அவரது முகம் மலர்ச்சியாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் புன்னகை நிறைந்ததாக இருக்கும். அதுபோல் அவர் சோகமாக இருந்தால் அவரது முகம் ‘களை இழந்து’ சோகத்தை வெளிப்படுத்துவதாக காட்சியளிக்கும்.

பெண்களின் முகத்தின் குறிப்பறிந்து அவர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை நாம் அறிய முடியும். அதுபோல ஒருவரின் கண்களின் மூலமும் அவர் என்ன மனநிலையில் இருக்கிறார், அவர் பேசுவது உண்மையா? பொய்யா? என்பது போன்ற தகவல்களை அறிந்துகொள்ள முடியும்.

ஒருவர் தனது உடல்மொழிகளை மறைத்தாலும் கண்களின் இயல்பை மறைக்க முடியாது என்பது மனநல அறிஞர்களின் கருத்தாகும். ஒவ்வொரு உணர்ச்சிகளுக்கும் ஏற்ப கண்களில் உள்ள விழித்திரை அகலாகமாக விரிகிறது. காதல் வசப்பட்டிருப்பவர் கண்களில் அன்பும், காமமும் வெளிப்படும்.

மகிழ்ச்சியாக இருப்பவர் கண்கள் சிரிப்பது போன்ற தோற்றத்தில் காட்சியளிக்கும். சோகத்தில் இருப்பவர் கண்கள் கலங்கிப்போய் சுருங்கி இருக்கும். பயத்தில் இருப்பவர் கண்கள் வெளிறிப்போய் காட்சியளிக்கும். இவ்வாறு ஒவ்வொரு உணர்ச்சிகளுக்கும் ஏற்ப கண்களும் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன.

அந்த கண்களின் மாறுபாட்டிற்கு ஏற்ப முகமும், உடலும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. நாம் ஒருவரை சந்தித்த உடன் அவர் முகத்தை வைத்தே, ‘என்ன இன்று மிகவும் உற்சாகமாக இருக்கிறீர்களே? என்ன விசேஷம்?’ என்று கேட்பதுண்டு. அதுபோல அவரது முகம் வாட்டமாக இருந்தால், ‘என்ன பிரச்சினை?’ என்று விசாரிப்பதும் உண்டு.

எனவே தான் ஒருவரிடம் ஒரு காரியத்திற்காக செல்லும் போது முதலில் அவரது முகத்தைப்பார்த்து அவர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை அறிந்துகொண்டு அதற்கு ஏற்ப நாம் செயல்பட வேண்டும் என்று பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள்.

குழந்தைகளே, உங்கள் பெற்றோரிடம் உங்களுக்கு ஏதாவது காரியம் ஆக வேண்டும் என்றால், முதலில் அவர்கள் முகத்தைப்பார்த்து அவர்கள் மனநிலையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப செயல்படுங்கள்.