அதிக வேகம் கொண்ட தொழில்நுட்பமே 5G

தற்போது காணப்படும் இணைய வேகத்தினை காட்டினும் சில மடங்கு அதிக வேகம் கொண்ட தொழில்நுட்பமே 5G ஆகும்.

இத் தொழில்நுட்பம் முழுமையாக அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னர் MIMO எனப்படும் சாதனத்தினை பயன்படுத்தி 4G தொழில்நுட்பத்தினை 5G ஆக மாற்றும் தொழில்நுட்பம் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.
MIMO எனப்படுவது Multiple Inpur Multiple Output என்பதாகும்.இது 4G இணைய வேகத்தினை 50Mbbs அதிகரிக்க செய்கின்றது.

5G தொழில்நுட்பம் 2020ம் ஆண்டளவிலேயே நிறுவப்படும் என தெரிகின்றது. இதற்கிடையில் மேற்கண்ட முயற்சியினை ரிலையன்ஸ் நிறுவனம் உட்பட வொடாபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் என்பனவும் மேற்கொள்கின்றன.

இதன் ஊடாக நெருக்கடியான தருணங்கள், கட்டடங்கள் அதிகம் உள்ள இடங்கள் மற்றும் வீட்டின் உட்புறங்கள் என்பவற்றிலும் வேகம் குறையாத இணைய இணைப்பினை பெற்றுக்கொள்ள முடியும்.