அவுஸ்ரேலியாவில் அதானி நிறுவனத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம்

அவுஸ்ரேலியாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் இந்தியாவைச் சேர்ந்த அதானி நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் அதானியின் நிறுவனமானதுஅவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் சுரங்கம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அந்நாட்டிலேயே மிகப்பெரிய சுரங்கமாக அமைய உள்ள இந்த சுரங்கத்திற்கு அவுஸ்ரேலியா அரசு கடந்த ஜூன் மாதம் ஒப்புதல் வழங்கியது.

அதானியின் நிலக்கரி சுரங்கக் கட்டுமானத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட போதே வடக்கு ஆஸ்திரேலியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நிலக்கரி சுரங்கத்தால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் என்று குற்றம் சாட்டிய சுற்றுச்சூழல் நல ஆர்வலர்கள் இதற்கு எதிராக குழு அமைத்தனர்.

இந்நிலையில், நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்திலுள்ள போண்டி கடற்கரையில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் அதானி நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர். கடற்கரை மணலில் STOP ADANI, ADANI GO HOME என்று எழுதி தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.