தந்தைக்கு எதிராக களமிறங்கும் மகள்!

ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று தாம் பிரச்சாரம் செய்யப்போவதாக முன்னாள் பிரதமர் Tony Abbott இன் மகள் Frances Abbott அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணங்களை கடுமையாக எதிர்ப்பவர் முன்னாள் பிரதமர் Tony Abbott என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் Tony Abbott க்கு எதிராக அவரின் மகள் பிரச்சாரம் செய்யப்போவதாக அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணங்களை அங்கீகரிப்பதா என்று அடுத்த மாதம் – அக்டோபர் மாதம் 11 ஆம் திகதி தொடங்கும் அஞ்சல் வழி கருத்து வாக்கெடுப்பில் மக்கள் ஆதரவு வழங்கவேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.