அவுஸ்ரேலியா அஸ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு கொடுத்தது ஏன்?: அசாருதீன்

அவுஸ்ரேலியா அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வின், ஜடேஜா இருவருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டது சரியான முடிவு அல்ல என்று அசாருதீன் கூறினார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

இதன் மூலம் 3 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. முன்னணி சுழற்பந்து வீரர்களான அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. உள்ளூர் தொடரில் முக்கியமான ஆட்டத்தில் அவுஸ்ரேலியாவுக்கு எதிராக இருவரும் இடம் பெறாதது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.

ஏற்கனவே இருவருக்கும் இலங்கை தொடரிலும் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் இந்த இருவரையும் தேர்வு குழு ஒருநாள் போட்டியில் இருந்து ஒரம்கட்ட முயற்சி செய்கிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த நிலையில் அவுஸ்ரேலியா தொடரில் அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது தொடர்பாக முன்னாள் கப்டன் அசாருதீன் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

இலங்கை தொடரில் அஸ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஆஸ்தி ரேலியா போன்ற சிறந்த அணிக்கு எதிரான போட்டியில் இருவருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டது சரியான முடிவு அல்ல. இருவரும் தலைசிறந்த சுழற்பந்து வீரர்கள் உள்ளூர் மைதானத்தில் அவர்களது பங்களிப்பு மிகவும் சிறப்பாக இருக்கும். ஆஸ்திரேலிய தொடரில் அவர்கள் விளையாட வாய்ப்பு கொடுத்து இருக்க வேண்டும்.

நான் கப்டனாக இருந்தால் உள்ளூரில் நடைபெறும் அவுஸ்ரேலியா தொடரில் அஸ்வின், ஜடேஜாவை தேர்வு செய்ய வைத்து இருப்பேன்.

வீராட்கேலி தலைமையிலான இந்திய அணி தற்போது மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டியில் ரெய்னா மீண்டும் தேர்வு ஆவார். அனுபவம் வாய்ந்த அவர் மிகவும் தொடரில் சிறப்பாக செயல்படக்கூடியவர். இவ்வாறு அவர் கூறினார்.