கடற்­படை மீதான போர்குற்றங்களை மறுக்கின்றேன்! -கடற்­படை தள­பதி

இலங்கை கடற்­படை மீதான போர்க்­குற்­றங்களை நான் மறுக்­கின்றேன். எனினும் கடற்­படை சீரு­டையில் குற்­றங்கள் இடம்­பெற்­றி­ருக்­கு­மாயின் அவர்­களை தண்­டிப்­பதில் மாற்றுக் கருத்து இல்லை என புதிய கடற்­படை தள­பதி வைஸ் அட்­மிரல் ட்ரவிஸ் சின்­னையா தெரி­வித்தார்.

நான் ஒரு அமெ­ரிக்க உள­வாளி அல்ல. இந்த குற்­றச்­சாட்டை நான் மறுக்­கிறேன் எனவும் அவர் குறிப்­பிட்டார். புதிய கடற்­படை தள­ப­தி­யாக கடமை பொறுப்­பேற்­றுள்ள வைஸ் அட்­மிரல் ட்ரவிஸ் சின்­னையா நேற்று கடற்­படை தலை­மை­ய­கத்தில் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பை மேற்­கொண்­டி­ருந்த போதே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அதில் மேலும் குறிப்­பி­டு­கையில், கடற்­ப­டையில் நான் 35 ஆண்­டுகள் சேவை புரிந்­துள்ளேன். இந்த நாட்­டுக்­கா­கவும் நாட்டின் விடு­த­லைக்­கா­கவும் என்­னா­லான சகல சேவை­யி­னையும் நான் எமது கடற்­ப­டை­யி­ன­ருடன் இணைந்து முன்­னெ­டுத்­துள்ளேன். நான் கடற்­ப­டையில் இணைந்த இரண்டு ஆண்­டு­களில் நாட்டில் பயங்­க­ர­வாத போராட்டம் ஆரம்­பிக்­கப்­பட்­டு­விட்­டது. ஆகவே எனது கடற்­படை பய­ணமும் கடி­ன­மா­ன­தா­கவே அமைந்­தது. யுத்தம் முடியும் வரையில் நான் படையில் இருந்தேன். எனினும் யுத்­தத்தை விடவும் சமா­தான காலமே மிகவும் கடி­ன­மான கால­மாக இருந்­தது என்று நான் நம்­பு­கின்றேன். யுத்­தத்தை நிறைவு செய்­ததை விடவும் சமா­தா­னத்தை பலப்­ப­டுத்­தவே எமக்கு கடி­ன­மாக உள்­ளது. மக்­களின் மனங்­களில் இன்றும் யுத்த கல­வரம் மட்­டுமே உள்­ளது. எனவே அதையும் தாண்­டிய சமா­தா­னத்தை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.

இந்த நாட்டில் மீண்டும் ஒரு போராட்டம் ஏற்­ப­டு­வ­தற்­கான எந்­த­வொரு வாய்ப்­பு­ம் இல்லை என நான் தனிப்­ப­டை­யாக நம்­பு­கின்றேன். இந்த நாட்டில் உள்ள சகல மக்­களும் அப்­பாவி மக்­க­ளே­யாவர். போரில் பொது­மக்­களே அதி­க­மாக உயி­ரி­ழந்­தனர். அவர்­க­ளு­க்கா­க­வுமே இந்த நாட்டை நாம் பயங்­க­ர­வா­தத்தில் இருந்து மீட்­டுள்ளோம். அதேபோல் நாட்டை விட்டு நான் வெளி­யே­றிய காலத்­திலும் இலங்கை கடற்­ப­டைக்­காக பல சேவை­களை செய்­துள்ளேன். அமெ­ரிக்க கடற்­படை அதி­கா­ரி­யாக நான் செயற்­பட்ட காலத்­திலும் என்னால் இலங்கை கடற்­ப­டைக்கு பல்­வேறு சேவைகள் செய்­யப்­பட்­டுள்­ளன. அவர்­க­ளு­ட­னான கூட்டு பாது­காப்பு நகர்­வு­க­ளுக்­காக உத­வி­களை நான் முன்னெ­டுத்­துள்ளேன். ஆனால் இவற்றை இப்­போது பேசு­வதில் எந்த அர்த்­தமும் இல்லை. அவை இடம்­பெற்று நீண்ட கால­மா­கி­விட்­டது.

கேள்வி :- இலங்கை கடல் எல்­லைக்குள் நீர்­மூழ்­கிக்­கப்பல் நகர்­வுகள் உள்­ள­தாக கூறப்படு­கின்­றது. இது நாட்­டுக்கு அச்­சு­றுத்­த­லாக அமை­யுமா?

பதில்:- அயல் நாடு­களின் மூல­மாக இலங்­கைக்கு எந்­த­வித அச்­சு­றுத்­தலும் இல்லை. நாம் அயல்­நாட்டு கடற்­ப­டை­யி­ன­ருடன் நட்­பு­றவை மேற்­கொண்டு வரு­கின்றோம். எனினும் மறு­புறம் இலங்கை கடல் பரப்பில் அயல்­நாட்டு நீர்­மூழ்கிக் கப்பல் பிர­வே­சிக்க வாய்ப்­புகள் உள்­ளன. அதனால் எமது பாது­காப்பு நகர்­வு­களில் எந்த பாதிப்பும் ஏற்­பட வாய்ப்­புகள் இல்லை. கடல் எல்­லைக்குள் நுழை­யாத போதிலும் எல்­லை­களின் மூல­மாக பய­ணிக்க வாய்ப்­புகள் உள்­ளன. எனினும் இதில் அச்­சு­றுத்­தல்கள் இல்லை.

கேள்வி:- எவன்கார்ட் நிறு­வனம் தொடர்பில் கடற்­ப­டையின் செயற்­பா­டுகள் எவ்­வா­றாக உள்­ளன?

பதில் :- எவன்கார்ட் கடல்­பா­து­காப்பு நிறு­வனம் குறித்து தவ­றான கருத்­து­க்க­ளுடன் கடற்­ப­டை­யினர் தொடர்­பு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். ஆனால் எவன்கார்ட் நிறு­வ­னத்­துக்கும் இலங்கை கடற்­ப­டைக்கும் இடையில் ஒரு தொடர்பு மட்­டுமே உள்­ளது. கடல் பாது­காப்பு நகர்­வு­களில் ஆயு­தங்­களை பாது­காக்கும் நட­வ­டிக்­கை­களை மட்­டுமே இலங்கை கடற்­படை முன்­னெ­டுத்­தது. அதை தவிர்ந்த ஏனைய அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் எவன்கார்ட் நிறு­வ­னமே முன்­னெ­டுத்­தது. அதேபோல் எவன்கார்ட் நிறு­வ­னத்தின் ஆயு­தங்­களை நாம் பயன்­ப­டுத்­தி­ய­தில்லை. இலங்கை கடற்­ப­டையின் ஆயு­தங்­க­ளையே நாம் பயன்­ப­டுத்தி கடல் பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்ளோம்.

அதை தவிர எவன்கார்ட் பல்­வேறு செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­தது. பய­ணி­களை கொண்டு செல்லல், பண்­டப்­ப­ரி­மாற்றம், ஹோட்­டல்­க­ளு­க்கான உல்­லாச பய­ணி­களை கொண்­டு­செல்லல், உல்­லாச களி­யாட்ட நட­வ­டிக்­கை­களை எல்லாம் அவர்கள் முன்­னெ­டுத்­தார்கள். இதில் எந்த செயற்பாட்­டிலும் இலங்கை கடற்­படை ஈடு­ப­ட­வில்லை. நாம் கடல் பாது­காப்பு நட­வ­டிக்­கை­களில் தகு­தி­யான நபர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சோமா­லிய எல்­லையில் கூட எமது பாது­காப்பு செயற்­பா­டு­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் வழங்­கப்­ப­டு­கின்­றது. எனினும் இப்­போது எவன்கார்ட் செயற்­பா­டுகள் இல்லை.

கேள்வி :- கடற்­படை மீதான போர்க்­குற்றம் தொடர்பில் கடற்­படை தள­ப­தி­யாக உங்­களின் நிலைப்­பாடு என்ன?

பதில் :- இறுதி யுத்­தத்தில் இடம்­பெற்ற போர்க்­குற்­றங்கள் தொடர்பில் பல்­வேறு கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. ஆனால் முன்­வைக்­கப்­பட்ட கார­ணி­களில் உண்மை இல்லை. இலங்கை கடற்­ப­டையை பொறுத்­த­வரை மிகவும் ஒழுக்­க­மான படை­யா­கவே நாம் கரு­து­கின்றோம்.

எனினும் கடற்­படை சீரு­டை­யினை அணிந்­து­கொண்டு கட­மைக்­கா­லத்தில் ஏதேனும் குற்­றங்கள் இடம்­பெற்­றுள்­ளன என்றால் அவை நிரூ­பிக்­கக்­கூ­டிய வகையில் இருக்­கு­மாயின் யாராக இருப்­பினும் அவர்­க­ளுக்கு தண்­டனை உண்டு. அதில் மாற்றுக் கருத்­து­க்கு இட­மில்லை. எனினும் பொய்­யாக குற்­றங்­களை சுமத்தி எவ­ரையும் தண்­டிக்க முடி­யாது. பாது­காப்பு வீரர் ஒருவன் கொலை­யாளி அல்ல, கொலை­யாளி ஒருவன் பாது­காப்பு வீரனும் அல்ல. இரா­ணுவ தள­பதி இந்த கருத்தை கூறுவார். இந்த வாக்­கி­யத்தில் நானும் முழு­மை­யாக உடன்­ப­டு­கின்றேன்.

கேள்வி :- புலி­களின் பட­கு­களை அழித்த பின்னர் உங்­க­ளுக்­கான அச்­சு­றுத்­தல்கள் ஏற்­ப­ட­வில்­லையா?

பதில் :- புலி­களின் ஆயுதப் பட­குகள் அழிக்­கப்­பட்­ட­தன் பின்­ன­ணியில் எனது தலை­மைத்­துவம் இருந்­தது. புலி­களின் 10 அதி நவீன ஆயுதக் கப்­பல்­களை நாம் அழித்த போது இந்த செய்தி வெளியில் வர­வில்லை. ஆனால் அவர்­களின் பட­கு­களை அழித்­த­மையே புலி­களின் கடற்­படை பலத்தை குறைக்க பிர­தான கார­ண­மாக அமைந்­தது. இந்த செயற்­பாட்டில் எனது பெயர் வந்­தி­ருக்­கு­மாயின் எனக்கு மட்­டு­மல்ல எனது குடும்­பத்­தி­ன­ருக்கும் அச்­சு­றுத்­த­லாக இருந்­தி­ருக்கும். எனது குடும்­பத்­தினர் தனி­மையில் கண்­டியில் இருந்­தனர். நான் முழு நேர­மாக கடற்­ப­டையில் என்னை ஈடு­ப­டுத்தி இருந்த கார­ணத்­தினால் அவர்­க­ளுக்கு பாது­காப்பு குறை­வா­கவே இருந்­தது. இந்­நி­லையில் எம்மால் இந்த செயற்­பா­டுகள் இடம்­பெற்­றன என்­பது தெரிய வந்­தி­ருக்­கு­மாயின் எமக்கு அச்­சு­றுத்­த­லாக மாறி­யி­ருக்கும். எனினும் எனது பெயர் வெளியில் வர­வில்லை. நான் மட்டும் அல்ல என்­னைப்போல் பலர் யாரென்று தெரி­யாத நிலை­மைகள் இன்றும் உள்­ளனர். என்­னுடன் கட­மை­யாற்­றிய பலர் இன்றும் அடை­யாளம் காட்­டிக்­கொள்­ளாது சேவை­யாற்றி வரு­கின்­றனர். இன்றும் எமக்கு அச்­சு­றுத்தல் உள்­ளது. எனினும் நாம் எம்மை பாது­காத்துக் கொள்­ளக்­கூ­டிய நிலையில் உள்ளோம். பயங்­க­ர­வாத அச்­சு­றுத்தல் இல்­லாத கார­ணத்­தினால் எமக்கு அழுத்­தங்கள் இல்லை.

கேள்வி:- யோஷித்த ராஜபக் ஷ இன்னும் கடற்­ப­டையில் உள்­ளாரா ?

பதில் :- யோஷித்த ராஜபக் ஷ தற்­போது கடற்­ப­டையில் இல்லை. அவ­ருக்­கான விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­கின்­றன. ஆகவே அது வரையில் அவரை சேவையில் இருந்து இடை நிறுத்தியுள்ளோம். விசா­ர­ணைகள் முடியும் வரையில் அவர் சேவையில் இருந்து நீக்­கப்­பட்­டுள்ளார். விசா­ர­ணை­களின் பின்னர் தீர்ப்­பு­களை பொறுத்து அவரை மீண்டும் இணைப்­பது குறித்து தீர்­மானம் எடுக்­கப்­படும். இந்த விசா­ர­ணை­களின் பூரண தக­வல்கள் தொடர்பில் இன்னும் நான் அவ­தா­னிக்­க­வில்லை. எனினும் யோஷித்த ராஜபக் ஷ தொடர்பில் பாரிய குற்­றங்கள் இல்லை. அவர் கட­மையில் நேர்த்­தி­யில்­லாது அதிக விடு­மு­றை­களை எடுத்­துள்ளார். தனிப்­பட்ட வெளி­நாட்டு பய­ணங்­களை மேற்­கொண்­டுள்ளார். இந்த விட­யங்­களை பாரிய குற்­ற­மாக கருத முடி­யாது. இவ்­வாறு பலர் உள்­ளனர். அவர்­க­ளுக்­கான கடற்­படை சட்டம் நடை­மு­றையில் உள்­ளது. அதற்­க­மைய தண்­டனை வழங்­கப்­படும்.

கேள்வி :- நீங்கள் ஒரு உள­வாளி என்ற குற்­றச்­சாட்டை முன்­வைத்­துள்­ளனர், இது தொடர்பில் உங்களின் பதில் என்ன ?

பதில் :- என்னை ஒரு அமெரிக்க உளவாளியாக சில அரசியல் வாதிகள் கூறுகின்றமையை நான் முழுமையாக மறுக்கிறேன். நான் ஒரு உளவாளி அல்ல. நான் இந்த நாட்டுக்காகவும் எமது நாடு என்ற உணர்விலும் 35 ஆண்டுகள் சேவை செய்தவன். நான் அமெரிக்க கடற்படையில் இணைந்த போதிலும் என்னால் இலங்கை கடற்படைக்கு பல்வேறு சேவைகள் ஆற்றப்பட்டுள்ளன. எமது கடற்படையினரை உறுதிபடுத்தவும், அவர்களுக்கான பயிற்சிகளை வழங்கவும் நான் அமெரிக்க கடற்படையின் உதவியுடன் பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளேன்.

அதேபோல் உளவாளி என்றாலும் கூட அது இலங்கைக்கு நன்மையாகவே அமையும். அதன் மூலமாக இலங்கைக்கு தேவையான பல்வேறு காரியங்களை சாதிக்க முடியும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால் நான் அமெரிக்க உளவாளி அல்ல என்றார்.