அவுஸ்ரேலியா அருகே டோங்கா தீவில் மிதமான நிலநடுக்கம்

அவுஸ்ரேலியா (17) அருகே அமைந்துள்ள டோங்கோ தீவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

அவுஸ்ரேலியா அருகே பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவு நாடு டோங்கா. இன்று அதிகாலை அந்த நாட்டின் தென் பகுதியில் அமைந்துள்ள நீடா என்ற இடத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பூமி குலுங்கியதால் வீடுகளில் இருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்து வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். சாலைகளில் லேசான விரிசல் ஏற்பட்டது.

இது குறித்து வானிலைஆராய்ச்சி மைய அதிகாரிகள் கூறுகையில், 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. கடலுக்கு அடியில் 97 கி.மீட்டர் ஆழத்தில் இது உருவானது. இதனால் கடலில் ராட்சத அலைகள் எழுந்தன, நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள்தெரியவில்லை. சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.