15000mah இரட்டை USB மற்றும் டிஜிட்டல் காட்சித்திரை

தகவல்தொழில்நுட்ப துணைப்பொருட்கள், ஆடியோ/வீடியோ மற்றும் கண்காணிப்புப் பொருட்களில் இந்தியாவின் முன்னணி விநியோகஸ்தரான ஜீப்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், 15000 Mah ஆற்றல் கொண்ட தனது பாக்கெட் அளவுள்ள புதிய ‘ZEB MC15000PD பவர் பேங்க்கினை’ அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. கைக்கு அடக்கமாக, ஸ்டைலான மற்றும் கச்சிதமான தோற்றத்தைக் கொண்ட இந்த பவர் பேங்க் உங்களது சாதனங்களுக்கு மிகவும் எளிமையான முறையில் மின்னூட்டம் செய்திடும், மேலும் இதில் கூடுதலாக உள்ள எல்.இ.டி ஒளியுடைய டார்ச் அனைத்துவிதமான அவசரக்காலத்திலும் ஒளியினை வழங்கிடும். இது அனைத்து செயல்களையும் சிறப்பாக செய்யவும், கச்சிதமாக மற்றும் லேசான எடையுடன் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கருப்பு மற்றும் சாம்பல் நிற மேலுறையைக் கொண்ட இந்த பவர் பேங்க் ஒரு ஃபேஷனுக்காக மட்டும் வைத்திருக்கும் சாதனமல்ல. இதன் டிஜிட்டல் எல்.இ.டி காட்சித்திரையின் உதவியால் இந்த சாதனத்தில் இன்னும் எவ்வளவு மின்சக்தி மீதமுள்ளது என்பதை துல்லியமாக உங்களால் சொல்ல முடியும் மேலும் இரட்டை USB முனையங்களின் அதிகபட்ச 2A வெளிப்பாடு இது மிகச்சிறந்த வகையில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்கிறது. பேட்டரியின் சதவிகிதம் மட்டுமல்லாமல் இதன் டிஜிட்டல் காட்சித்திரை 1A அல்லது 2A என்கின்ற வெளிப்பாட்டின் நிலையையும் காண்பிக்கிறது. இது பவர் பேங்கினை மின்னூட்டம் செய்வதற்கு ஒரு மைக்ரோ USB உடன் வருகிறது, இதில் மின்னூட்டம் செய்வதற்கான அதிகபட்ச மின்சக்தி 2A ஆகும். இப்போது நீங்கள் அதனை அதிகம் சார்ஜ் செய்துவிடுவீர்களோ என்பன போன்ற பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை, ஏனெனில் இது அதிக சார்ஜ் செய்யப்படுதல், குறைந்த வோல்டேஜ், மற்றும் குறைந்த மின்னழுத்த பிரச்சனை போன்றவற்றுக்கு எதிரான பாதுகாப்புடன் வருகிறது.

நீங்கள் வேலை செய்து கொண்டிருக்கும்போது இந்த பவர் பேங்க் உங்களது சாதனங்களை நாள் முழுவதும் மின்னூட்டம் செய்யட்டும். நீங்கள் முழுமையாக நம்பக்கூடிய ஒரு பவர் பேங்கின் உதவியால் அழைப்புகள், சமூக ஊடகம், அரட்டை, வீடியோ பார்த்தல் போன்ற உங்களது அன்றாட வழக்கமான செயலையும், இன்னும் இதுபோன்ற பல்வேறு செயல்களையும் நீங்கள் செய்திடலாம். பாதுகாப்பு, ஸ்டைல், செயல்பாடு மற்றும் இணக்கத்தன்மை போன்ற அம்சங்களில் ஜீப்ரானிக்ஸ் தலைசிறந்த பலன்களை வழங்குகிறது. பெரும்பாலான சாதனங்களுடன் இணக்கமாக செயல்படக்கூடிய இந்த பவர் பேங்க் 1 ஆண்டு உத்திரவாதத்துடன் இந்தியாவில் உள்ள அனைத்து முன்னணிக் கடைகளிலும் கிடைக்கிறது.