3 கதாபாத்திரங்களில் விஷால் நடிக்கும் ‘நாளை நமதே’

சி.வி.குமார் தயாரிக்கும் புதிய படத்தில் விஷால் 3 கதாபாத்திரங்களில் நடிக்கிறார். இப்படத்துக்கு ‘நாளை நமதே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் பொன் ராமின் உதவியாளர் வெங்கடேசன் இயக்கத்தில் விஷால் நடிக்கிறார். இப்படத்தை சி.வி.குமார் தயாரிக்கிறார். 3 கதாபாத்திரங்களில் விஷால் நடிக்கும் ‘நாளை நமதே’ படத்தில் அவருக்கு ஜோடியாக இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர். நகைச்சுவை கதாபாத்திரத்தில் சதீஷ் நடிக்கிறார். இதை சி.வி.குமார் தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

‘துப்பறிவாளன்’, ‘இரும்புத் திரை’, ‘கறுப்பு ராஜா வெள்ளை ராஜா’ ஆகிய படங்களுக்குப் பிறகு ‘நாளை நமதே’ படத்தில் விஷால் நடிக்க உள்ளார்.

ஏற்கெனவே விஷால் 3 கதாபாத்திரங்களில் நடித்த ‘மதகஜராஜா’ படம் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் ‘நாளை நமதே’ படத்தில் 3 கதாபாத்திரங்களில் விஷால் நடிக்க உள்ளார். கதாநாயகிகள் தேர்வு, பிற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.