வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்: போட்டோ, வீடியோ மற்றும் எமோஜிக்களை செட் செய்யலாம்

வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டுள்ள புதிய ஸ்டேட்டஸ் அப்டேட் மூலம் வாடிக்கையாளர்கள் புகைப்படம், வீடியோ மற்றும் எமோஜி உள்ளிட்டவற்றை செட் செய்து கொள்ள முடியும்.

வாட்ஸ்அப் உலகின் பிரபலமான மெசேஜிங் ஆப் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதில் வழங்கப்பட்டுள்ள புதிய அப்டேட் பற்றி உங்களுக்கு தெரியுமா?
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பரிசோதனை செய்யப்பட்டு, சில தினங்களுக்கு முன் வாட்ஸ்அப் பீட்டா பதிப்புகளுக்கு மட்டும் வழங்கப்பட்ட புதிய ஸ்டேட்டஸ் அப்டேட் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட் வாட்ஸ்ப் ஸ்டேட்டஸ்-இல் புதிய வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
அதன்படி வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-இல் வாடிக்கையாளர்கள் இனி புகைப்படம், வீடியோ அல்லது எமோஜி உள்ளிட்டவற்றை செட் செய்து கொள்ள முடியும். இதே போன்ற வசதி ஏற்கனவே இன்ஸ்டாகிராம் செயலியிலும் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்அப்பில் இந்த வசதியை பெற வாடிக்கையாளர்கள் தங்களின் செயலியை அப்டேட் செய்ய வேண்டும்.
பிப்ரவரி 24 ஆம் திகதி வாட்ஸ்அப் செயலியின் 8-வது பிறந்த தினம் என்பதால் புதிய ஸ்டேட்டஸ் அப்டேட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதிய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட் மூலம் ஸ்டேட்ஸ் பகுதியில் புகைப்படம், வீடியோ அல்லது எமோஜிக்களை வைத்து கொள்ள முடியும்.  வாட்ஸ்அப் குறுந்தகவல்களை போன்றே ஸ்டேட்ஸ் அப்டேட்களும் முழுமையான என்க்ரிப்ஷன் வசதி பெற்றுள்ளது.
இதே போன்ற வசதி ஸ்நாப்சாட் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலியும் வழங்கப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் 24 மணி நேரம் கழித்து தானாக மறைந்து விடும். இதுவரை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பகுதியில் எழுத்துக்களை மட்டுமே பதிவு செய்ய முடியும் என்ற  ரீதியில் புதிய அப்டேட் மிகப்பெரிய வசதியாகவே பார்க்கப்படுகிறது.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் வழங்கப்பட்டு வரும் புதிய அப்டேட் முதற்கட்டமாக சில நாடுகளை தொடர்ந்து சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.