ஜப்பானில் ரோபோ குழந்தைகள்

மகப்பேறு இல்லா தம்பதிகளின் ஏக்கத்தை போக்க ஜப்பானில் ‘ரோபோ’ குழந்தைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஜப்பானில் அதிக அளவில் ‘ரோபோ’ (இயந்திர மனிதன்) பயன்பாடு உள்ளது. அவை ஆஸ்பத்திரிகள், கடைகள், அலுவலகங்கள், வீடுகள் என பல இடங்களில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மகப்பேறு இல்லா தம்பதிகளின் குறையை போக்கவும், தனிமையில் இருப்பவர்களின் வெறுமையை தணிக்கவும் ‘ரோபோ’ குழந்தைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதற்கு ‘கிரோபோ மினி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ரோபோவை பியூமோனோரி கடயாகோ என்ற நிபுணர் வடிவமைத்துள்ளார்.

இந்த குழந்தை ரோபோ அழகாக கண் சிமிட்டுகிறது. குழந்தை போன்று மழலை குரலில் பேசுகிறது. சிரிக்கிறது, அழுகிறது. அதன் விலை ரூ. 25 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திர குழந்தைகள் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது.